ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா, spring onion pagoda recipe in Tamil, Tamil samayal kurippu

மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள் : 

  • வெங்காயத்தாள் – ஒரு கட்டு
  • கடலை மாவு – 100 கிராம்
  • சோள மாவு – 50 கிராம்
  • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய் – கால் கிலோ
  • உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: 

வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயத்தாளை போட்டு அதனுடன் கடலைமாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பக்கோடாவாக சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரித்து எடுக்கவும்.

சூப்பரான ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா ரெடி.
Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors