அடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்!, beauty hair tips in tamil

பெண்களின் அழகை பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு வகிக்க கூடியது கூந்தல் தான். நல்ல கருமையான, அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. நமது அம்மாக்களின் தலைமுறையில் ஒரு சிலருக்கு மட்டுமே அடர்த்தி மற்றும் நீளம் குறைவான கூந்தல் இருக்கும். காரணம் அந்த கால பெண்களின் கூந்தல் பராமரிப்புதான்.

ஆனால் அடுத்த தலைமுறை அப்படியே நேர்மாறாக மாறிவிட்டோம். எதற்கெடுத்தாலும் நாகரிகம் பார்க்கும் நம் தலைமுறையினர்,பெற்றதை விட இழந்தது தான் அதிகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் வீட்டில் தயாரித்த சீகைக்காய் பொடி, அன்னையின் அரவணைப்போடு பூசப்பட்ட எண்ணெய் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்ததன் விளைவுதான்கூந்தலின் பொலிவு முதல் அடர்த்தி வரை அத்தனைஆரோக்யத்தையும்முற்றிலும் இழந்து வருகிறோம்.மீண்டும் கூந்தலின் அடர்த்தியை கொண்டு வரவும் பாதுகாக்கவும் சில டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்…

ட்ரிம்மிங் செய்தல் :

கூந்தலின் நுனிகளில் ஏற்படும் வெடிப்பு போன்றவை முடியின் வேர் வரை பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அடிக்கடி பாதிப்பிற்குள்ளான நுனி முடியினை ட்ரிம்மிங் செய்வதன் மூலம் அடர்த்தியான முடியினை பெற முடியும்.

எண்ணெய் தேய்த்தல்:

அந்த காலம் முதல் இன்று வரை கூந்தல் பராமரிப்பு என்றாலே அது எண்ணெய் சார்ந்த விஷயம் தான். கூந்தலில் எண்ணெய் தேய்ப்பதனால் முடி மிருதுவாகவும், அடர்த்தியாகவும் வளர உதவியாக இருக்கும். தேங்காய் எண்ணெய், ஆலீவ் எண்ணெய் டீ மர எண்ணெய் போன்றவை கூந்தலுக்கு நல்ல பலம் தரக்கூடியவை.

முட்டை மாஸ்க்:

முட்டையில் கூந்தலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளிக்கருவை கொண்டு தலையில் மாஸ் போல போடுவதன் மூலம் முடி நல்ல வளர்ச்சியையும், அடர்த்தியையும் பெறும்.

எண்ணெய் குளியல்:
உடலில் ஏற்படும் அதிக சூடு முடி உதிர்வதற்கான முக்கிய காரணியாகும். உடல் சூட்டை சமநிலையில் வைத்துக்கொள்ள வாரம் ஒருமுறையாவது நல்லண்ணெய் , சீகைக்காயை கொண்டு எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும்.

மாசு கட்டுப்பாடு:
சுற்று புறத்தில் உள்ள மாசுக்களால் கூந்தல் அதிக பாதிப்பை சந்திக்கின்றன. எனவே வெளியில் செல்லும் பொழுது கூந்தலை ஸ்கார்ப் கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். அதேபோல ட்ரையர், ஹீட்டர் மற்றும் கலரிங், இரசாயனம் மிகுந்த ஷாம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

Loading...
Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors