வெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper fry recipe in tamil, tamil cooking tips

வெண்டைக்காய் பெப்பர் பிரை
தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் – 1/4 கிலோ,
மிளகு – 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
பூண்டு – 3 பல்,
கடுகு – தாளிக்க.

வெண்டைக்காய் பெப்பர் பிரை

செய்முறை :

வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்த பின்னர் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.

மசாலாவுடன் சேர்த்து வெண்டைக்காய் நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை ரெடி.
Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors