மீன் கட்லெட், fish cutlet recipe in tamil, tamil samayal kurippu

Fish cutlet Recipe :

தேவையான பொருட்கள் :

மீன் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 3,
முட்டை – 1,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு,
பிரட்தூள் – தேவையான அளவு,
எலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) மீன் துண்டுகளின் மீது மஞ்சள்தூள் தூவி, மீனை வேக வைத்து தோலை உரித்துவிட்டு மசித்துக் கொள்ளவும்.

2) இதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

3) கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி இறக்கிவிடவும்.
4) இதனுடன் மசித்து வைத்துள்ள மீன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து

கொண்டு வேண்டிய வடிவில் கட்லெட்டாக தட்டிக் கொள்ளவும்.

5) முட்டையை, மிளகுத்தூளுடன், உப்பும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

6) ப்ரட்தூளை மற்றுமொரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

7) எண்ணெய் சூடானதும், கட்லெட்டை முதலில் முட்டையில் நனைத்து, பின் பிரட்தூளில் பிரட்டி எண்ணெயில் இட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்

Loading...
Categories: அசைவம்

Leave a Reply


Sponsors