மைசூர் பாக், maisoor paak recipe in tamil, samayal kurippu tamil

சரியான அமைப்பைப் பெற, பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவு மிகவும் முக்கியமானது.

இந்த செய்முறையை இரட்டிப்பாக்கலாம் அல்லது மும்மடங்காக செய்யலாம்,

ஆனால் ஒரு பெரிய தொகுதியைக் கிளறிவிடுவது ஒரு உண்மையான கை வேலையாக இருக்கும், ஏனெனில் அது தொடர்ந்து கிளறல் தேவைப்படுகிறது, மேலும் ஒருவர் விரைவாக இருக்க வேண்டும்.

மைசூர் பாக்

மைசூர் பாக் என்பது தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு. இது இந்திய மாநிலமான கர்நாடகாவில் தோன்றியது.

Ingredients for மைசூர் பாக்

1 கப் கடலை மாவு
3 கப் நெய்
2 கப் சர்க்கரை
1 கப் தண்ணீர்

How to make மைசூர் பாக்

கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும்.
ஒற்றைக் கம்பிப் பத்ததிற்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.
அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.
மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது.
அப்படியே செட்டாக விட வேண்டும்.
அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும்.
சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors