இட்லி,தோசை இல்லாத காலை உணவு சட்டுன்னு ஐந்தே நிமிடத்தில்..! Breakfast Recipes in Tamil..!, no idly thosai good healthy breakfast recipe in tamil, tamil cooking tips in tamil, samayal kurippu in tamil

இட்லி,தோசை இல்லாத காலை உணவு சட்டுன்னு ஐந்தே நிமிடத்தில்..! Breakfast Recipes in Tamil

Breakfast Recipes in Tamil:- இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா உங்களுக்கு அப்போ இந்த டிஷ் செய்து சாப்பிடுங்கள் மிகவும் சுவையாகவும், மிக அருமையாகவும் இருக்கும். குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்… இந்த டிஷ் செய்வதற்கு அதிக நேரம் ஆகாது.. அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக சுவையாக செய்துவிட முடியும்.

சரி வாங்க கோதுமை மாவை வைத்து செய்ய கூடிய அந்த சுவையான டிஸ் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போமா…

எளிமையான காலை உணவு செய்ய – தேவையான பொருட்கள்:

இரண்டு நபர் சாப்பிடுவதற்கான அளவு:

 1. உருளைக்கிழங்கு – 400 கிராம்
 2. கோதுமை மாவு – அரை கப்
 3. பொடிதாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
 4. கொத்தமல்லி இலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
 5. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 6. உப்பு – தேவையான அளவு
 7. மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
 8. எண்ணெய் – தேவையான அளவு
 9. முட்டைக்கோஸ் மற்றும் கேரட் துருவல் – அரை கப்

எளிமையான காலை உணவு செய்முறை / Breakfast Recipes in Tamil Step: 1

முதலில் உருளைக்கிழங்கை சுத்தமாக அலசி அவற்றில் உள்ள தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக கட் செய்யவும்.

அதன் பிறகு மிக்சி ஜாரில் கட் செய்த இந்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைபோல் அரைத்து கொள்ளவும்.

எளிமையான காலை உணவு செய்முறை / Breakfast Recipes in Tamil Step: 2

அரைத்த இந்த உருளை கிழங்கை ஒரு சுத்தமான பவுலில் ஊற்றி அதனுடன் 1/2 கப் கோதுமை மாவு, வெங்காயம் ஒரு கப், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, துருகிய முட்டைக்கோஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக தோசை மாவு போல் கலந்து கொள்ளவும்.

அவ்வளவு தாங்க மாவு தயார்.

எளிமையான காலை உணவு செய்முறை / Breakfast Recipes in Tamil Step: 3

இவ்வாறு தயார் செய்த மாவினை தோசை கல்லில் தோசை போல் ஊற்றி வேகவைத்து எடுக்க வேண்டும்.

சுவையான மற்றும் எளிமையான காலை உணவு தயார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடுய காலை உணவு தயார். அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள்.

ஈசியா ருசியா Breakfast Recipes செய்து முடிக்கனுமா இதை படியுங்கள்..!

எளிமையான காலை உணவு / Breakfast Recipes in Tamil:- இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா உங்களுக்கு அப்போ இந்த டிஷ் செய்து சாப்பிடுங்கள் மிகவும் சுவையாகவும், மிக அருமையாகவும் இருக்கும். குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்… இந்த டிஷ் செய்வதற்கு அதிக நேரம் ஆகாது.. அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக சுவையாக செய்துவிட முடியும்.

 

சரி வாங்க கோதுமை மாவை வைத்து செய்ய கூடிய அந்த சுவையான டிஸை எப்படி (Breakfast Recipes in Tamil) செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் இங்கு படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்:-

 1. உருளைக்கிழங்கு – 1 (சீவி நிலமாக கட் செய்து கொள்ளவும்)
 2. பச்சைமிளகாய் – 2 (பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்)
 3. கொத்தமல்லி இலை – (பொடிதாக நறுக்கியது)
 4. மிளகு தூள் – 1/4 ஸ்பூன்
 5. வெங்காயம் – 1 (பொடிதாக நறுக்கியது)
 6. கோதுமை மாவு – 4 ஸ்பூன்
 7. முட்டை – 2
 8. உப்பு – தேவையான அளவு
 9. எண்ணெய் – தேவையான அளவு

Breakfast Recipes in Tamil / எளிமையான காலை உணவு செய்முறை:

How To Make Breakfast Recipes in Tamil Step: 1

முதலில் வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும், பின்பு பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும், அதன் பிறகு உருளைக்கிழங்கை தோல் சீவி, பஜ்ஜி சீவும் கட்டையில் நைசாக சீவி, பின்பு நீளவாக்கில் கட் செய்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லியை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

இப்பொழுது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும் அவற்றில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்துக்கொள்ளவும்.

How To Make Breakfast Recipes in Tamil Step: 2

பின்பு நான்கு ஸ்பூன் கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.

பிறகு இரண்டு முட்டையை உடைத்து இந்த கலவையுடன் ஊற்றுங்கள்.

பின் தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 ஸ்பூன் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து இந்த கலவையை நன்கு கலந்து கொள்ளவும்.

How To Make Breakfast Recipes in Tamil Step: 3

இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, கல் சூடேறியதும், எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை தோசை போல் ஊற்றி வேகவைக்கவும். கீழ் பகுதி நன்கு வெந்தவுடன், தோசையை பிரட்டி மறுபக்கத்தையும் வேகவைக்க வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான மற்றும் எளிமையான காலை உணவு தயார் அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors