உங்களுக்கு பிபி, கொலஸ்ட்ரால் வராம இருக்கணுமா? அப்ப மறக்காம தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க…,maruthuva kurippugal,maruthuva kurippugal in tamil language

இன்று பலரும் கம்ப்யூட்டர் முன் தான் வேலை பார்க்கிறோம். இப்படி கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலைப் பார்ப்பதால், உடலுழைப்பு குறைந்து பல நோய்கள் நம் உடலில் வர ஆரம்பித்துவிடுகின்றன. அதுவும் இந்நோய்கள் உடனே ஒருவரைத் தாக்குவதில்லை.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் மோசமான நிலையில் அமர்ந்திருந்தால், முதலில் லேசாக இடுப்பு பகுதியில் வலி ஆரம்பிக்கும். பின் அப்படியே அந்த வலி, தோள்ப்பட்டை, கழுத்து என்று பரவி, பின் தலை பாரமாகும். பின்பு நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது போன்று இருக்கும். அதன்பின் பலவீனமாக உணர்வோம்.

These 12 Super Foods Can Combat The Side Effects Of A Sedentary Lifestyle

அடுத்ததாக மிகவும் சோம்பேறியாகி, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போய், ஒட்டுமொத்த உடலும் போதுமான உழைப்பின்றி சோர்ந்துவிடும். இவை எல்லாவற்றையும் நாம் உணர்ச்சிகளால் அறிகிறோம். ஒருவேளை நம்மால் உணர முடியாமல் போனால், நம் நிலைமை எப்படி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

இன்று அதிகப்படியான வேலைப்பளுவால் பலர் சரியான நேரத்தில் சாப்பிடாமல், உடல் ஆரோக்கியத்தைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். இதன் விளைவாக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய பிரச்சனைகளான மாரடைப்பு, இதய குழாய்களில் அடைப்பு போன்ற பல மோசமான பிரச்சனைகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறோம்.

நீங்கள் சந்தோஷமாக வாழ நினைத்தால், முதலில் உடல் ஆரோக்கியத்தைக் கவனியுங்கள். அதற்கு தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதோடு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒருசில உணவுப் பொருட்களை அன்றாடம் சாப்பிடுங்கள். இங்கு அது எந்தெந்த உணவுகள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றில் ஏதேனும் ஒன்றையாவது தவறாமல் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களில் அந்தோசையனின்கள் உள்ளன. இந்த பழங்களை ஒருவர் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்து வந்தால், அது இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்
வாழைப்பழம் எளிதில் விலைக் குறைவில் கிடைக்கும் ஓர் அற்புதமான உணவுப் பொருள். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இதர பொட்டாசியம் நிறைந்த உணவுப் பொருட்களாவன அவகேடோ, முலாம் பழம், காளான், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தக்காளி, டூனா, பீன்ஸ் போன்றவை.

பீட்ருட்

பீட்ருட்
பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகளவு உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும். ஆகவே இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விலகி இருக்க நினைத்தால், அவ்வப்போது பீட்ரூட்டை சமைத்து சாப்பிடுங்கள்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் அதிக அளவில் கொக்கோ உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உட்பொருளாகும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், டார்க் சாக்லேட்டை தினமும் சிறிது சாப்பிடுவது நல்லது.

கிவி

கிவி
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீரான அளவில் பராமரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்
ஓட்ஸில் பீட்டா-க்ளுக்கன் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். மேலும் பீட்டா-க்ளுக்கன் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும். எனவே காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சிறந்த வழி என்றே கூறலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் நைட்ரேட் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. நைட்ரேட் நிறைந்த காய்கறிகளை ஒருவர் அன்றாடம் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தை மாத்திரையின்றி குறைக்க முடியுமாம். எனவே இந்த வகை காய்கறிகளை தவறாமல் தினமும் சாப்பிடுங்கள்.

பூண்டு

பூண்டு
பூண்டு உடலில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடு அளவை நேரடியாக தாக்கும். மேலும் இது சிறந்த ஆன்டி-பயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு உணவுப் பொருளும் கூட. பூண்டு பற்களை குளிர் காலங்களில் ஒருவர் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலுக்கு தேவையான கதகதப்பு கிடைத்து, அதிகமாக குளிர்வது குறையும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகளில் வெஜிடேரியன் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை வளமான அளவில் நிரம்பியுள்ளது. இச்சத்துக்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே இந்த வகை உணவுகளையும் ஒருவர் அதிகம் எடுப்பது மிகவும் நல்லது.

பட்டை
பட்டை
பட்டையை ஒருவர் தினமும் மிகக்குறைந்த அளவில் எடுத்து வந்தாலே, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அந்த அளவில் பட்டைக்கு உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது.

க்ரீன் டீ

க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது உடலில் உள்ள செல்கள் அழிவதைத் தடுப்பதோடு, ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் முதுமைத் தோற்றத்தையும் தடுக்கும். நீங்கள் இளமையுடன் நீண்ட நாட்கள் காட்சியளிக்க விரும்பினால் க்ரீன் டீயை தினமும் குடியுங்கள்.

சியா விதைகள்

சியா விதைகள்
சியா விதைகள் மீன்களுக்கு ஒரு சிறந்த மாற்று உணவுப் பொருளாகும். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் அதிக அளவில் உள்ளதால், ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கும். மேலும் இந்த சிறிய விதைகளில் மக்னீசியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் சத்துக்களும் ஏராளமாக உள்ளன.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors