உங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா?

மனிதனாக பிறந்த அனைவருமே ஆசைப்படும் ஒரு விஷயம் என்றால் அது அதிர்ஷ்டம்தான். ஏனெனில் கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் சேரும்போது ஒருவரின் வளர்ச்சி என்பது எல்லையற்றதாக இருக்கும். ஆனால் பெரும்பாலானோர் தங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று குறைகூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல.

How Lucky Are You Based On Your Zodiac Sign?

பணம், புகழ் கிடைப்பது மட்டும் அதிர்ஷ்டமல்ல. மனிதனாக பிறந்த அனைவருக்குமே அதிர்ஷ்டம் என்பது கண்டிப்பாக இருக்கும். ஆனால் இது எந்தவிதத்தில் என்பதும் மட்டும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இவ்வாறு மாறுபடுவதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்த பதிவில் உங்கள் ராசிப்படி உங்களுக்கு எதில் அதிர்ஷ்டம் இருக்கும் என்று பார்க்கலாம்.

 மேஷம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கதவுகள் திறந்து கொண்டே இருக்கும். உங்கள் வேலை உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த சவாலையும் வெற்றிகரமாக முடிக்க உங்களின் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு காதலில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். ரிஷப ராசி ஆண்களுக்கு எப்பொழுதும் பெண்களின் ராசி இருக்கும். இது காதல் மற்றும் ரொமான்ஸில் அவர்களுக்கு பெரிதும் உதவும். உங்கள் காதல் வாழ்க்கையில் எந்தவொரு அழுத்தமான சிக்கல்களும் இல்லாதது உங்களின் அதிர்ஷ்டமாகும். இதன் விளைவாக, உங்கள் உறவுகள் நிலையானதாகவும், சீரானதாகவும் இருப்பதால், உங்கள் ராசி அன்பில் அதிர்ஷ்டசாலி.

 மிதுனம்

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நட்பில் அதிர்ஷ்டம் இருக்கும். விளையாட்டு மற்றும் நட்பு இரண்டிற்கும் வரும்போது உங்களுக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கிறது, நீங்கள் எப்போதும் உங்கள் நண்பர்களை நம்பலாம். ஒரு விதத்தில் மிதுன ராசிக்காரர்கள் இந்த துறையில் தங்கள் சொந்த அதிர்ஷ்டத்தை சம்பாதிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் எப்படியும் இயற்கையாகவே நேசமானவர்கள்.

கடகம்

கடகம்
கடக ராசிக்காரர்கள் குடும்பத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். குடும்ப உறவுகளை பொறுத்த வரையில் நீங்கள் அனைத்து விதத்திலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். இதனை நீங்கள் அதிர்ஷ்டமாக கருதாமல் இருக்கலாம், ஆனால் பணம் மட்டும் மகிழ்ச்சியை வழங்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் குடும்பம் நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும்.

சிம்மம்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் உறவுகளில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். நீங்கள் அடிக்கடி மகிழ்ச்சியுடன் காதலிக்கிறீர்கள். உங்கள் உறவுகளில் ஆர்வமும், தீவிரமும் எப்பொழுதும் இருக்கும். உங்கள் துணை உங்கள் விசுவாசத்தை கேள்விக்குட்படுத்தவில்லை, அவர்களுடைய கேள்வியை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கன்னி

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கல்வியில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு படிப்பில் அதிர்ஷ்டம் எப்பொழுதும் துணையாக இருக்கும். இவர்களின் முயற்சிக்கும், ஈடுபாட்டுக்கும் ஏற்ப வெகுமதி இவர்களுக்கு தானாக வந்து சேரும். தேவையில்லா விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் மேலும் உயரத்தை அடையலாம்.

துலாம்

துலாம்
காதலின் அதிர்ஷ்ட நட்சத்திரம் என்று துலாம் ராசிக்காரர்களைக் கூறலாம். இவர்களுக்குள் இருக்கும் காதலின் அதிர்ஷ்டத்தால் இவர்கள் அக அழகு, புற அழகு இரண்டிலும் சமநிலையுடன் இருப்பார்கள். உறவுக்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சமநிலையை நோக்கிய உங்கள் குணம் காரணமாக உங்கள் காதலில் எப்பொழுதும் பிரச்சினைகள் எழாது.

விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணத்தில் அதிர்ஷ்டம் இருக்கும். உங்களின் சிறந்த உள்ளுணர்வு காரணமாக அதிர்ஷ்டம் இவர்களுக்கு பண விஷயத்தில் சாதகமாக இருக்கும். இவர்களின் உயர்ந்த அளவிலான கருத்து மற்றும் உங்கள் புத்திசாலித்தனமான இராசி அடையாளம் பொதுவாக மோசமான முதலீடுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இவர்களின் உள்ளுணர்வு இவர்களை சாதிகள் மற்றும் வலைகளில் விழாமல் பாதுகாக்கும்.

 தனுசு

தனுசு
சூதாட்டங்களில் அதிர்ஷ்டம் எப்பொழுதும் இவர்களின் பக்கம் இருக்கும். அதிர்ஷ்டத்தை பொறுத்த வரையில் இவர்கள் ஆல் ரவுண்டராக இருப்பார்கள். குறிப்பாக விளையாட்டுகளில் இவர்களின் அதிர்ஷ்டம் அனைவரையும் வெல்ல துணையாக இருக்கும். அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி உங்களின் உத்திகளில் கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.

மகரம்
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு வேலை அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். இந்த அதிர்ஷ்டம் வேலையில் அதிக செயல்திறன் மிக்க நகர்வுகளை மேற்கொள்ளவும், எளிதாக முன்னேறவும் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலைகளில் உங்கள் அதிர்ஷ்டம் முடிந்து விட்டது என்று தவறாக நினைக்காதீர்கள், ஏனெனில் சரியான சந்தர்ப்பத்தில் உங்களின் அதிர்ஷ்டம் உங்களுக்கு வாய்ப்பை பெற்றுத்தரும்.

கும்பம்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்பொழுதும் துணையாக இருக்கும். விளையாட்டுகள் மற்றும் வாழ்க்கையில் மாற்றங்கள் வரும்போது அதிர்ஷ்டம் இவர்களுடன் துணையாக இருக்கும். முடிந்த வரை சவால்களை எதிர்கொள்ள முயலலுங்கள், நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் உங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் நேர்மறையான மாற்றங்களாக இருக்கும்.

மீனம்

மீனம்
உங்களின் அதிர்ஷ்டம் என்பது நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு சந்திப்புகளை மேற்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்ததாகும். மற்ற ராசிகளை போல அல்லாமல் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்வதில் உங்களின் பங்கு முக்கியமாக உள்ளது. வாழ்க்கை உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வது உங்களின் சாமர்த்தியம்

Loading...
Categories: News

Leave a Reply


Sponsors