தினமும் பழங்கள் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா….?

நன்கு பழுத்த பழங்களை வாங்கி கழுவிய பின்பு அப்பழங்களிலிருந்து சாறெடுத்து சாப்பிடுதலே பழச்சாறு ஆகும். இச்சாறுடன் தண்ணீர் கலந்தோ, இயற்கையாக கிடைக்கும் தேனையோ சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
நன்கு கனிந்த பழங்களை எடுத்து கழுவி, தோல் உரித்து, விதை நீக்கி சாப்பிட வேண்டும். சில பழங்களை அப்படியே சாப்பிடலாம். எடுத்துக்காட்டாக கொய்யாப்பழம், இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
ஆப்பிள், பேரிக்காய் இவற்றை கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி விதைகளை நீக்கிவிட்டு சாப்பிடலாம். அன்னாசிப்பழம், திராட்சைப்பழம் இவற்றை சாப்பிடலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி சாப்பிடலாம்.
ஆப்பிள், கொய்யா, வாழை பழங்கள், பேரீச்சம் பழம், திராட்சைப்பழம் இவற்றினை கலந்ததே கலப்பு பழங்கள். இத்துடன் தேனும், தேங்காய் துருவலும் சேர்த்து சாப்பிடலாம்.
திராட்சைப் பழச்சாற்றினை அருந்தும்போது பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. திராட்சை பழச்சாற்றை புளிக்கவைத்து சாப்பிடக்கூடாது. புளித்த பின்பு அது போதையை உண்டாக்கும் தன்மையுடையது.
அத்திப்பழச்சாறு, சப்போட்டா பழச்சாறு தயாரிக்க, அத்திப்பழம், சப்போட்டா பழத்தை தோல் உரித்து பழங்களை எடுத்து சிறிதளவு தண்ணீர் கலந்து ஜூசாக தயார் செய்யலாம்.
ஆப்பிள் பழத்தில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இப்பழச்சாற்றினை, பழத்தினை தினசரி சாப்பிட்டு வர அனைத்து ரக நோய்களிலிருந்தும்
விடுபட முடியும்.
எலுமிச்சை ஜூஸ் சாப்பிட்டால் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். பல சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி டீ, காப்பி சாப்பிடுவர். அதற்கு பதிலாக இதனை சாப்பிட்டால் சோர்வு, வறட்சி, தாகம் நீங்கும். இச்சாறை மயக்கம், வாந்தி, உஷ்ணம், பித்தம், வாய்குமட்டல், நீர்வேட்கை,
கண்நோய், அம்மைநோய் உடையவர்கள், காமாலை நோய் மற்றும் கழிச்சல் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
Loading...
Categories: arokiya unavu in tamil, Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors