பீஃப் குழம்பு, beef curry kulambu recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

பீஃப்                          –        1/2 கிலோ

வெங்காயம்                  –        2 (நடுத்தர அளவு)

இஞ்சி                        –        1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்               –        2

கறி வேப்பிலை               –        3 – 4 கொத்து

நீர்                           –        கப்

தேங்காய் எண்ணெய்        –        தேவையான அளவு

உப்பு                         –        தேவையான அளவு

அரைக்க

இஞ்சி                        –        1 மேஜைக்கரண்டி

பூண்டு                       –        1 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்                –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                –        1/4 தேக்கரண்டி

மல்லி தூள்                 –        1 மேஜைக்கரண்டி

சோம்பு தூள்                 –        1/2 தேக்கரண்டி

பட்டை                      –        1″ துண்டு

கிராம்பு                      –        2

ஏலக்காய்                   –        2

நட்சத்திர சோம்பு            –        1(சிறியது)

நல்ல மிளகு                 –        1/2 தேக்கரண்டி

செய்முறை

அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி , பச்சை மிளகாய், மற்றும் கறி வேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்பு அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்கவும்.

பின்பு அதனுடன் பீஃப் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பீஃப் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.

பின்பு மூடியை எடுத்து விட்டு கிரேவி கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.

பீஃப் கறி ரெடி!!!!

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil

Leave a Reply


Sponsors