மாட்டிறச்சிக் குழம்பு, beef kulambu curry recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

கறி                                    –     கால் கிலோ

சின்ன வெங்காயம்         –     20

தேங்காய் எண்ணெய்     –     3 மேசைக்கரண்டி

மல்லித் தூள்             –     2 தேக்கரண்டி

பெருஞ்சீரகம்          –     1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்          –     6

தேங்காய்               –     2 சில்லுகள்

மஞ்சள்தூள்            –     அரைத்தேக்கரண்டி

உப்பு                    –     தேவையான அளவு

செய்முறை

கறியை சிறுசிறுத் துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும். கறி என்று பொதுவாய் குறிப்பிட்டு இருப்பதன் காரணம், இந்த முறையில் எந்த ஒரு இறைச்சியையும் சமைக்கலாம் என்பதுவே.

எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ந்தவுடன் அரிந்த வெங்காயம், நறுக்கிய கறித்துண்டுகளைப் போட்டு வதக்கவேண்டும்.

கறி வதங்கி நீர் வற்றியவுடன், மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

மல்லி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொண்டு சோம்பு, தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கறி அரைவேக்காடு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா, சிறிது மஞ்சள் பொடி, தேவையான உப்பு ஆகியவற்றைப் போட்டு சிறிது நீர் சேர்த்து வேகவிடவும்.

கறி வெந்ததும் தணலில் வைத்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors