பீஃப் பீட்ஸா, beef pizza recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

கோதுமை பீட்ஸா பன்        –        500 கிராம்

மாட்டிறச்சி                  –        250 கிராம்

காளான்                      –        250 கிராம்

ஆலிவ் ஆயில்               –        தேவைக்கு

தக்காளி சாஸ்               –        ¾ கப்

வான் கோழி பெப்பரோனி

(turkey pepperoni)               –        ¼ கப்

மொசரெல்லா சீஸ்           –        2/3 கப்

வத்தல் மிளகு செதில்கள்    –        ¼ தேக்கரண்டி

செய்முறை

மைக்ரோ வேவ் அவனை 450°F வெப்ப நிலையில் வைக்கவும். பீட்ஸா பன்னை 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.

அதே நேரம் மிதமான தீயில் வாணலியை வைத்து அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கவும். பின்பு மாட்டிறச்சி மற்றும் காளான் சேர்க்கவும். 5 நிமிடம் வேக வைக்கவும். மாட்டிறச்சி நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.

பின்பு பீட்ஸா பன்னை மைக்ரோ வேவ் அவனில் இருந்து வெளியே எடுத்து எண்ணெய் தடவப் படாத குக்கீ ஷீட்டில் வைக்கவும். அதன் மீது ஓரத்திலிலுருந்து 1 இஞ்ச் தூரம் விட்டு முழுவதும் தக்காளி சாஸ் வைக்கவும். தக்காளி சாஸ் மீது மாட்டிறச்சி காளான் கலவை , வான் கோழி பெப்பரோனி மற்றும் சீஸ் சேர்க்கவும். அதன் மேல் வத்தல் மிளகு செதில்களை தூவவும்.

மீண்டும் அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து 7-10 நிமிடங்கள் பேக் செய்யவும். அல்லது பன் பொன்னிறமாகும் வரை மற்றும் சீஸ் ஊருகும்  வரை பேக் செய்யவும்.

பின்பு அதனை முக்கோண வடிவ துண்டுகளாக வெட்டி அனைவருக்கும் பரிமாறவும்.

Loading...
Categories: pizza recipe in tamil

Leave a Reply


Sponsors