கத்தரிக்காய் சாதம், brinjol rice recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

பிஞ்சு கத்தரிக்காய்   –      300 கிராம்

அரிசி               –      250 கிராம்

சின்ன வெங்காயம்   –      10

வத்தல் மிளகாய்     –      5

மல்லித் தூள்       –      ஒன்றரை டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள்         –      சிறிதளவு

கடுகு                –      1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு    –      1 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு       –      ஒன்றரை டேபிள் ஸ்பூன்

உப்பு                –      தேவையான அளவு

நல்லெண்ணெய்      –      200 மில்லி

கறிவேப்பிலை        –      தேவையான அளவு

மல்லித் தளை        –      தேவையான அளவு

செய்முறை:

*அரிசியை குழைந்து விடாமல் சாதமாக வடித்துக் கொள்ளுங்கள். கத்தரிக்காயை நீளவாக்கில் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள்.

*வெங்காயம்,  கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.  கடலைப்பருப்பு, உளுந்து, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து  அரைத்துக் கொள்ளுங்கள்.

*வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், கத்தரிக்காயைப்  போட்டு வதக்குங்கள்.

*கத்தரிக்காய் நன்கு வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு கிளறி ஐந்து நிமிடம் மூடிவைத்து கிளறி  இறக்குங்கள்.

*இந்த கலவையில், சாதத்தையும் அரைத்து வைத்துள்ள கலவையையும் சிறிது, சிறிதாகப் போட்டு கிளறுங்கள்.

*இதில் மீதமிருக்கும்  எண்ணெயை ஊற்றி கொத்தமல்லியைத் தூவுங்கள். கத்தரிக்காய்  சாதம்  ரெடி.

*குறிப்பு:  நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன

Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Samayal Tips Tamil, சைவம்

Leave a Reply


Sponsors