ப்ரூசல் ஸ்ப்ரவுட்ஸ் குழம்பு, Brussels sprouts curry recipe in tamil, samayla kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

ப்ரூசல் ஸ்ப்ரெவுட்ஸ்    –        250 கிராம்

வெங்காயம்             –        3/4 கப்

தக்காளி                 –        1

பச்சை மிளகாய்         –        1

எண்ணெய்              –        1.5 மேஜைக்கரண்டி

பூண்டு                  –        2 பற்கள்

ஜீரகம்                  –       3/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           –        2 சிட்டிகை

மிளகாய் தூள்          –        1/2 தேக்கரண்டி

சோம்பு தூள்           –       1/2 தேக்கரண்டி

மல்லி தூள்            –        1 தேக்கரண்டி

பச்சை பட்டாணி       –        3/4 கப்

மல்லி தளை           –        சிறிது

எலுமிச்சை சாறு       –        தேவையான அளவு

செய்முறை

ப்ரூசல் ஸ்ப்ரெவுட்ஸின் அனைத்து மஞசள் நிற இதழ்களையும் நீக்கி விடவும். பின்பு நன்கு கழுவி இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் கடினமான பகுதியை நீக்கி விடவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகம், மற்றும் பண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தக்காளி மசியும் வரை வே வைக்கவும்

பச்சை மிளகாய், வத்தல் மிளகாய், சோம்பு மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும்

நன்கு கிளறி மசாலாக்களின் பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும்

பின்பு ப்ரூசல் ஸ்ப்ரெவுட்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும். 2 – 3 நிமிடங்கள் கிளறவும்

அதன் பின் மூடி வைத்து 2-3 நிமிடங்கள் வேக வைக்கவும். சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்.

பின்பு நன்கு கிளறி 2-3 நிமிடங்கள் வேக வைக்கவும். அதன் பின் மல்லித் தளை தூவி தீயை அணைத்து விடவும். எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்

ப்ரூசல் ஸ்ப்ரவுட்ஸ் குழம்பு ரெடி!!!

Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors