உடல் எடையைக் குறைக்கும்… ருசியையும் கொடுக்கும் முட்டைகோஸ் சட்னி…, cabbage chutney recipe in tamil, health tips in tamil, tamil samayal kurippu in tamil, cooking tips in tamil

உடற்பயிற்சியும் தீவிரமான உணவுகட்டுப்பாடும் உடல் எடையைக் குறைக்க உதவுவதை போலவே சில வகை உணவுகளும் கூட அதிகரிக்கு ம் உடல் எடையைக் குறைத்து அழகாக காட்டுகிறது. வேகமாக ஏறும் உடல் எடையை விரைவாக குறைக்க இவை ஒன்று போதும்..

முட்டை கோஸ் சட்னி உடல் எடையைக் குறைக்க உதவும்
  • உடல் எடையைக் குறைக்க தீவிரமான உணவு கட்டுப்பாடு இருப்பவர்கள் உடல் எடை குறையும் உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
  • இட்லி, தோசைக்கு தொட்டுகொள்ள ருசியாக இருக்கும் இந்த முட்டைகோஸ் சட்னி அனைவருக்கும் பிடிக்கும்

எப்போதும் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என்று எல்லா கிழங்குகளும் ஃப்ரைவகைகளாகத்தான் செய்கிறோம். காய்கறிகளில் வெண்டைக்காய், பாவற்காயும் கூட டீப் ஃப்ரை செய்து சாப்பிடுவதுதான் பலருக்கும் பிடித்திருக்கிறது. இவையெல்லாம் உடலுக்கு சத்துகொடுக்கிறதோ இல்லையோ உடல் எடையை அதிகரிக்கவே செய்யும்.

இந்த வகையான உணவுகள் ருசியாலும் சுவையாலும் நமது நாக்கை அடிமையாக்கி வைத்திருக்கிறது. காய்கறிகளை சாப்பிட வேண்டும். எப்படி சாப்பிட்டால் என்ன. அதனால் தான் பிடித்தமாதிரி சாப்பிடுகிறோம், காய்கறிகள் இல்லாத சாப்பாடு எப்படி. பிறகு உடலில் ஊட்டசத்துகள் அளவு குறைந்துவிடாதா என்பவர்களும் உண்டு.

உடல் எடையைக் குறைக்க அன்றாடம் எடுத்துகொள்ளும் உணவில் சில சில மாற்றங்களை செய்து வந்தால் உடல் எடை யைக் குறைத்துவிடலாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கூடவே சத்துகளும் குறையாமல் இருக்கும் என்கிறார்கள் ஊட்டசத்து நிபுணர்கள். அந்த வகையான ரெஸிபிகளைத் தான் நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம்.

இன்று அதிகப்படியான உடல் பருமனைக் குறைக்க உதவும் உணவு பொருள்களில் முக்கியமான் ஒன்றை பார்க்கலாம். உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சியும் உணவில் கட்டுப்பாடும் தேவைதான். ஆனால் உடல் எடையைக் குறைக்க உத வும் உணவுகள் இதிலிருந்து விதிவிலக்கு. அதில் ஒன்று அதிக பலன் தரும் முட்டை கோஸ்.

நீர்ச்சத்து நிறைந்த இந்த காய்கறியை எப்போதும் பொரியலிலும் கூட்டிலும் குருமா குழம்பிலும் சாப்பிடுவது பலருக்கும் போராக இருக்கும். இதையே அன்றாட அவசிய உணவான இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளும் சுவையான துவையல்/ சட்னி ஆக மாற்றிவிட்டால் வித்தியாசமான ருசியில் தினமுமே சாப்பிடத்தோன்றும்.

முட்டை கோஸ் சட்னி எப்படி செய்வது பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்
முட்டை கோஸ்- நறுக்கியது 1 பெரிய கப்
கறிவேப்பிலை- 1 சிறிய கப்
தேங்காய்- அரை மூடி
வரமிளகாய்- காரத்துக்கெற்ப
புளி- சிறு எலுமிச்சை அளவு
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1 மேசைக்கரண்டி
கல் உப்பு, நல்லெண்ணெய்- தேவைக்கு

வேகமாக உடல் எடை குறைய உதவும் ருசியான உணவு

செய்முறை
தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முட்டை கோஸை சுத்தம் செய்து சிறு பொடியாக நறுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து வாசனை போக வதக்கவும். பிறகு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய முட்டை கோஸை சேர்த்து வதக்கவும்.

பிறகு காரத்துக்கேற்ப வரமிளகாய், புளி சேர்த்து எல்லாம் கலந்துவரும்படி நன்றாக வதக்கவும். இறக்கும் போது கல் உப்பு போட்டு இறக்கி ஆறவிடவும். பிறகு கலவை ஆறியதும் மிக்ஸியில் காயவைத்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

கார சாரமாக இருக்கும் இந்த முட்டைகோஸ் சட்னி வெகு ருசியாக இருக்கும். மல்லிகை போன்ற இட்லிக்கும், பேப்பர் ரோஸ்ட் தோசைக்கும், கல் தோசைக்கும் சரியான காம்பினேஷன் என்றால் இந்த முட்டை கோஸ் சட்னி என்று சொல்ல லாம்.

முட்டை கோஸ் பயன்
காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த காய்களை அவசியம் எடுத்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவார் கள். அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்த முட்டைகோஸ் மிகவும் நல்லது.

இது இலைகளால் ஆன காய் என்று சொல்லலாம். தினமும் தண்ணீர் அதிகம் குடிக்காதவர்கள் கூட இந்தக் காயை அதிகள வில் எடுத்துகொள்ளும் போது உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.

உடலில் இருக்கும் செரிமானக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருப்பதோடு மலச்சிக்கல் பிரச்சனையை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் கெட்ட கொழுப்புகள் தங்காமல் பாதுகாத்து உடல் பருமன் உண்டாகாமல் தடுக்கிறது. முட்டைகோஸை அன்றாடம் உணவில் ஏதோ ஒரு வகையில் எடுத்துகொள்ளும் போது மட மடவெனெ ஏறிய எடை கிடு கிடுவென குறைந்துவிடும் ஆரோக்கியமாகவே..

முட்டைகோஸ் பயன்கள் அறிவோம்
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடல் உறுப்புகளுக்கு பலத்தை கொடுக்கும் . குறிப்பாக கண் பார்வை கோளாறுகள், கண் நரம்புகள், எலும்புகளுக்கு, நரம்புகளுக்கு வலு கொடுக்கிறது.

சிறுநீரைத் தேக்காமல் பிரித்துவெளியேற்றுவதில் விரைவாக செயல்படுகிறது. ஆரோக்கியம் தாண்டி சருமத்தை அழகாக் குவதிலும் முடியின் வேர்க்கால்களுக்கு பலம் தருவதிலும், சரும வறட்சியை நீக்கி சருமத்துக்கு பொலிவு தருவதிலும் கூந்தல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது.

அழகுக்கு அழகுமாச்சு ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமாச்சு. ருசிக்கு ருசியுமாச்சு. இது போதுமே அடிக்கடி முட்டை கோஸ் எடுத்துக்கலாம்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Chutney Recipes Tamil, Healthy Recipes In Tamil, Sadny Tips, Sadny Tips in Tamil

Leave a Reply


Sponsors