குடைமிளகாய் குழம்பு, capsicum curry kulambu recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

குடைமிளகாய்                      –        11/2 கப்

வெங்காயம்                          –        1

தக்காளி                             –        1/4 கப்

மிளகாய் தூள்                        –        3/4 தேக்கரண்டி

வெந்தயக் கீரை                      –        1/2 தேக்கரண்டி

கறி வேப்பிலை                      –        1 கொத்து

ஜீரகம்                               –        1/4 தேக்கரண்டி

ஏலக்காய்                            –        3

பச்சை மிளகாய்                      –        1

இஞ்சி பூண்டு விழுது                 –        1 தேக்கரண்டி

உப்பு                                 –        தேவையான அளவு

எண்ணெய்                           –        தேவையான அளவு

நிலக்கடலைமுந்திரிகச கசா      –        11/2 மேஜைக்கரண்டி

காய்ந்த தேங்காய்                    –        11/2 மேஜைக்கரண்டி

எள்                                  –        3/4 தேக்கரண்டி

கரம் மசாலா                         –        3/4 தேக்கரண்டி

மல்லி தூள்                          –        1/2 தேக்கரண்டி

செய்முறை

02 sun samayal capsicum recipe

நிலக்கடலை லேசாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்பு அதனுடன் எள் மற்றும் முந்திரி சேர்க்கவும். விரும்பினால் காய்ந்த தேங்காய் சேர்க்கவும். பின்பு அவற்றை ஆற வைக்கவும்.

03 sun samayal capsicum recipe

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

04 sun samayal capsicum recipe

தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தக்காளி மசியும் வரை வதக்கவும்

05 sun samayal capsicum recipe

மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை 3 நிமிடங்கள் எண்ணெய் வெளியேறும் வரை வேக வைக்கவும். பின்பு அதனை இறக்கி ஆற வைக்கவும்

06 sun samayal capsicum recipe

07 sun samayal capsicum recipe

வதக்கிய வெங்காயம் தக்காளி கலவை, வறுத்த நிலக்கடலை, எள் மற்றும் காய்ந்த தேங்காய் ஆகியவற்றை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 3/4 கப் நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

08 sun samayal capsicum recipe

பானில் சிறிது எண்ணெய் சேர்த்து பே லீஃப், கறி வேப்பிலை, ஏலக்காய், ஜீரகம் சேர்க்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 3 நிமிடங்கள் வதக்கவும்

09 sun samayal capsicum recipe

பின்பு அதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும். இதனை கவனமாக செய்யவும்.  அரைத்த விழுது சேர்க்கும் போது அது தெறிக்கும் எனவே 1/4 கப் நீர் தயாராக வைத்திருந்து உடனடியாக ஊற்றவும்.

10 sun samayal capsicum recipe

பின்பு வெந்தயக் கீரை சேர்த்து சிறிது கரம் மசாலா அல்லது மல்லித் தூள் சேர்க்கவும். விரும்பினால் மிளகாய் தூள் சேர்க்கவும். தேவையான அளவு நீர் சேர்க்கவும். குடைமிளகாய் வேகும் வரை வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து விடவும்.

01 sun samayal capsicum recipe

குடைமிளகாய் குழம்பு ரெடி!!!

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors