காரட் கல்கண்டு ரெசிபி, carrot kalkandu recipe in tamil, tamil cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

நெய்                       –        1 தேக்கரண்டி

கன்டைன்ஸ்ட் மில்க்       –        1 டின்(400 கிராம்)

காரட்                       –        1/2 கிலோ

ரோஸ் வாட்டர்             –        1 தேக்கரண்டி

பால்                       –        1 லிட்டர்

எலுமிச்சை சாறு           –        தேவையான அளவு

பிஸ்தா  / முந்திரி பருப்பு    –        சிறிது

செய்முறை

பாலை கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

பால் திரையத் தொடங்கியவுடன் தீயை அணைத்து விட்டு 5 நிமிடங்கள் தனியே வைக்கவும்.

பின்பு பாலை ஒரு சுத்தமான காட்டன் துணியால் வடிகட்டவும். பின்பு அதனை கட்டி அதிலுள்ள நீர் வெளியேறும் வரை வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடாக்கவும்.

துருவிய காரட் சேர்க்கவும். 4 நிமிடங்கள் நன்கு கிளறவும்.

கன்டன்ஸ்ட் மில்க் சேர்க்கவும். நன்கு கலக்கி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்

காரட்டின் ஈரப்பதம் வெளியேறியதும்  அதனுடன் திரைந்த பால் சேர்க்கவும்.

நன்கு கலக்கி வேக வைக்கவும்.

ரோஸ் வாட்டர் அல்லது ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு தீயை அணைத்து விடவும். கலவை கெட்டியாக தொடங்கும்

ஒரு அலுமினியம் ஃபாயிலில் நெய் தடவிக் கொள்ளவும். பின்பு அதில் காரட் கலவையை படத்தில் உள்ளது போல் வைத்து அதனை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். அதன் மீது பாதாம் அல்லது முந்திரியை வைக்கவும்.

காரட் கல்கண்டு ரெசிபி ரெடி!!!!!!!!

Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors