சென்னை சிக்கன் பிரியாணி, chicken briyani recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி         –      2 கப்

சிக்கன்                  –      1/2 கிலோ

இஞ்சி                 –      சிறிய துண்டு

பூண்டு                       –      5

பச்சை மிளகாய்         –      2

எண்ணெய்             –      2 மேஜைக்கரண்டி

நெய்                  –      2 மேஜைக்கரண்டி

கிராம்பு                      –      3 – 4

பட்டை                –      1 துண்டு

பிரியாணி இலை      –      2

நட்சத்திர சோம்பு      –      1

ஏலக்காய்                 –      2 – 3

வெங்காயம்              –      2

மல்லித்தளை     மற்றும்

புதினா               –      1 கப்

தக்காளி                   –      2

தயிர்                       –      1/2 கப்

 மஞ்சள் தூள்        –      ஒரு சிட்டிகை

உப்பு                 –      தேவையான அளவு

சிக்கனை ஊற வைக்க

எலுமிச்சை சாறு     –      1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்        –      ஒரு சிட்டிகை

மிளகாய் தூள்          –      1/2 தேக்கரண்டி

உப்பு                 –      தேவையான அளவு

செய்முறை

பாஸ்மதி அரிசியை 5 நிமிடம் நீரில் ஊற வைத்து பின்பு வடிகட்டி கொள்ளவும்

பின்பு சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதனுடன்  எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு  மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு எண்ணெய் சூடானதும் கிராம்பு பட்டை பிரியாணி இலை நட்சத்திர சோம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து நிறிது நேரம் வதக்கவும்

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

பின்பு நறுக்கிய மல்லித் தளை மற்றும் புதினா சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் வதக்கவும்

பின்பு அதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு மசித்த தக்காளி தயிர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து எண்ணெய் வெளியேறும் வரை வேக வைக்கவும்

பின்பு அதனுடன் 4 கப் நீர் சேர்க்கவும். பின்பு சுவையை சரிபார்த்த பின்பு அதனுடன் பாஸ்மதி அரிசி சேர்க்கவும்

பின்பு அனைத்தையும் நன்கு கலக்கி அதனை மூடி வைத்து  குறைந்ந தீயில் வேக வைக்கவும் . பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வைரை வைத்து பின் 5-7 நிமிடம் சிம்மில் வைக்கவும்

பிரயாணி ரெடி பின்பு அதன் மேல் புதினா மற்றும் மல்லித் தளை தூவி

.பின் பரிமாறவும்

Loading...
Categories: Biryani Recipes Tamil, chicken receipies in tamil

Leave a Reply


Sponsors