சிக்கன் தம் பிரியாணி, chicken dum briyani recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

சிக்கன்                        –      ஒரு கிலோ

பாஸ்மதி அரிசி                –      ஒரு கிலோ

வெங்காயம்                          –      4

தக்காளி                                –      4

புதினா                        –      அரைக்கட்டு

மல்லித்தளை                  –      அரைக்கட்டு

இஞ்சி ,  பூண்டு     விழுது      –      4 தேக்கரண்டி

மிளகாய் தூள்                –      ஒன்றரை தேக்கரண்டி

பிரியாணி மசாலா தூள்        –      ஒன்றரை தேக்கரண்டி

பச்சை மிளகாய்               –      5 (அ) 6

எலுமிச்சை                   –      ஒன்று

எண்ணெய்                    –      ஒரு குழிக்கரண்டி

கேசரி பவுடர்                  –      சிறிது

தாளிக்க

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

பிரியாணி இலை

அன்னாசிப்பூ.

செய்முறை

அரிசியை களைந்து ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது புதினா சேர்த்து வதக்கவும.

 

பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.

 

அதனுடன் மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

 

நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது, ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து, கேசரி பவுடரை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.

 

நன்றாக கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும்.

 

5 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வற்றியதும், மெதுவாக கிளறிவிட்டு புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.

 

மீண்டும் மெதுவாக கிளறி விட்டு அடுப்பின் தணலை குறைத்து வைத்து மூடி, அதன் மீது அடுப்பு கரி தணலை பரவலாகப் போட்டு கனமான பொருளை வைத்து 10 நிமிடங்களுக்கு தம்மில் வைக்கவும்.

 

10 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும்.

 

சுவையான சிக்கன் தம் பிரியாணி தயார்.

Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors