சிக்கன் குழம்பு , chicken kulambu chicken curry recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

 

தேவையான பொருட்கள்

சிக்கன்                         –        1 கிலோ

நல்ல மிளகு தூள்           –        1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                  –        1 தேக்கரண்டி

உப்பு                           –        1 தேக்கரண்டி

மசாலா கிரேவிக்கு

வெங்காயம்                  –        3

இஞ்சி                         –        1 மேஜைக்கரண்டி

பூண்டு                        –        1 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்               –        2 மேஜைக்கரண்டி

மல்லித் தூள்                –        4 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்         –        1 கே்கரண்டி

சோம்புத் தூள்                –        1 தேக்கரண்டி

கறிவேப்பிலை             –        3 கொத்து

தக்காளி                     –        2

நீர்                            –        1½கப்

மல்லித் தளை              –        2 கொத்து

உப்பு                         –        தேவைக்கு

தேங்காய் எண்ணெய்      –        தேவைக்கு

செய்முறை

சிக்கனை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நல்ல மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடங்கள் வைக்கவும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், கறி வேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

வெங்காயம் பொன்னிறமானதும் அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

பின்பு அதனுடன் மிளகாய் தூள், மல்லலித் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின்பு சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்

தக்காளியை அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனை கிரேவியுடன் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

அதன்பின் அதனுடன் நீர் சேர்க்கவும். கிரேவியில் உப்பை சரிபார்த்து தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.

மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்

பின்பு மல்லித் தளை தூவி பரிமாறவும்

சிக்கன் கறி ரெடி

Loading...
Categories: chicken receipies in tamil

Leave a Reply


Sponsors