சிக்கன் மசாலா தொக்கு, chicken masala thokku recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையானபொருள்கள்

சிக்கன்                     –      அரை கிலோ

வத்தல் மிளகாய்              –      10

பெரிய வெங்காயம்          –     2

பச்சை மிளகாய்                –      2

இஞ்சி, பூண்டு விழுது        –      2 தேக்கரண்டி

எலுமிச்சை                 –      ஒன்று சிறியது

கரம் மசாலா               –      ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள்               –      2 தேக்கரண்டி

தக்காளி                    –      ஒன்று

சர்க்கரை                   –      ஒரு தேக்கரண்டி

எண்ணெய்                 –      பொரித்தெடுக்க

உப்பு                       –      தேவையான அளவு

செய்முறை

*வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி பச்சை மிளகாயை கீறியும் வைக்கவும்.காய்ந்த மிளகாயை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும்.

*சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் மற்றும் பாதி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.சிறிதளவு எண்ணெயில் மிளகாய் விழுதை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

*ஊறவைத்த சிக்கனை அரை வேக்காடாக பொரித்தெடுக்கவும்.மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

*இதனுடன் வதக்கி வைத்துள்ள மிளகாய் விழுத்து சேர்த்து வதக்கவும்.கரம் மசாலா சேர்த்து பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பிறகு எண்ணெய் மேல வந்ததும் இறக்கவும்.

*இப்போது சுவையான சிக்கன் மசாலா தொக்கு தயார்.!!!!!!!

Loading...
Categories: chicken receipies in tamil

Leave a Reply


Sponsors