சிக்கன் பீட்ஸா, chicken pizza recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

பிட்ஸா க்ரெஸ்ட்       –        300 கிராம்

சிக்கன் பிரெஸ்ட்        –        2

தக்காளி                –        1 கப்

மொசரெல்லா சீஸ்      –        1 கப்

செடர் சீஸ்             –        1 கப்

ராஞ்ச் ட்ரெஸ்ஸிங்     –        ½ கப்

வெங்காயத் தாள்       –        ¼ கப்

செய்முறை

ஓவனில் வெப்ப நிலை 425 டிகிரியாக வைக்கவும்.

பீட்சா பானில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளவும்

அதனை தனியே வைக்கவும்

ஒரு பெரிய வாணலியில் சிக்கனை மிதமான வெப்பத்தில் 10 -12 நிமிடங்கள் அல்லது சிக்கன் வேகும் வரை வேக வைக்கவும்.

பின்பு அதனை வெளியே எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்

பிசைந்து வைத்திருக்கும் பீட்ஸா மாவை எண்ணெய் தடவிய பானில் வைக்கவும்.

பின்பு அதனை ஓவனில் 7 – 8 நிமிடங்கள் வைத்து பொன்னிறமாகும் வரை வைத்து எடுக்கவும்.

பீட்ஸா க்ரெஸ்டில் ராஞ்ச் ட்ரெஸ்ஸிங்கை பரவலாக எங்கும் விடவும்.

பின்பு துருவிய மொசரெல்லா சீஸ் தூவவும்

அதன் மீது நறுக்கிய தக்காளி , வெங்காயம் சேர்க்கவும். பின்பு அதன் மீது சிக்கன் வைக்கவும்

பின்பு துருவிய செடார் சீஸ் தூவவும்.

பின்பு மீண்டும் ஓவனில் வைத்து 20 – 25 நிமிடம் அல்லது சீஸ் உருகும் வரை வைக்கவும்.

பின்பு ஓவனில் இருந்து வெளியே எடுத்து முக்கோண வடிவ துண்டுகளாக வெட்டவும்.

பின்பு பரிமாறவும்.

Loading...
Categories: pizza recipe in tamil

Leave a Reply


Sponsors