சிக்கன் ரோஸ்ட் , chicken roast recipe in tamil, cooking tips in tamil, tamil samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

சிக்கன்                   –        1 கிலோ

நெய்                     –        1 தேக்கரண்டி

முந்திரி பருப்பு           –        2 மேஜைக்கரண்டி

மல்லித் தளை           –       தேவைக்கு

ஊற வைக்க

மிளகாய் தூள்            –        2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்             –        1 தேக்கரண்டி

உப்பு                     –        1 தேக்கரண்டி

கிரேவிக்கு

வெங்காயம்                  –        6

உப்பு                     –        தேவையான அளவு

கறிவேப்பிலை           –        3 கொத்து

பச்சை மிளகாய்            –        4

பூண்டு விழுது           –        1 மேஜைக்கரண்டி

இஞ்சி விழுது            –        1 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்           –        4 தேக்கரண்டி

மல்லித் தூள்            –        5 தேக்கரண்டி

சோம்புத் தூள்           –        2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்        –        2 தேக்கரண்டி

தக்காளி                      –        4

மல்லித் தளை           –        2 மேஜைக்கரண்டி

தேங்காய் எண்ணெய்    –      தேவைக்கு

செய்முறை

சிக்கனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 1 மணி நேரம் வைக்கவும்

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுது மற்றும் இஞ்சி விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்

பின்பு தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

தக்காளி நன்கு வெந்ததும் சுவையை சரிபார்த்துக் கொள்ளவும். பின்பு சிக்கன் மற்றும் சிறிது மல்லித் தளை சேர்க்கவும்

சிக்கன் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.

பின்பு அதிலுள்ள நீர் வெளியேறும் வரை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு மல்லித் தளை, நெய் மற்றும் முந்திரி சேர்த்து இறக்கவும்.

Loading...
Categories: chicken receipies in tamil

Leave a Reply


Sponsors