சில்லி சிக்கன், chilli chicken recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

எண்ணெய்           –        பொரிக்க

சிக்கன்              –        250 கிராம் (எலும்பில்லாதது)

சில்லி சாஸ்         –        11/2 தேக்கரண்டி

சோயா சாஸ்        –        11/2 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்   –        1/4 தேக்கரண்டி

சோள மாவு         –        3 மேஜைக்கரண்டி

மைதா              –       3 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்       –        1/4 தேக்கரண்டி

உப்பு               –        சிறிது

தாளிக்க

சோயா சாஸ்        –        11/2 தேக்கரண்டி

சில்லி சாஸ்         –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்        –        1/2 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்    –        1/4 தேக்கரண்டி

வினிகர்              –        1 தேக்கரண்டி

சர்க்கரை             –        1/2 தேக்கரண்டி

காய்கள்

வெங்காயம்          –        1

பூண்டு               –        2 தேக்கரண்டி

குடை மிளகாய்      –        1/2 கப்

பச்சை மிளகாய்      –        2

வெங்காயத் தாள்     –        1 கொத்து

செலரி               –        5 இலைகள்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சோயா சாஸ், சில்லி சாஸ், நல்ல மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கி 45 நிமிடங்கள் தனியே வைக்கவும்.

பின்பு சோள மாவு, மைதா மாவு மற்றும் உப்பு சேர்க்கவும்.சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும். விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

பின்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

சிக்கன் ரெடி

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் துணண்டுகளைப் போடவும்.

பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

பின்பு ஒரு பாத்திரத்தில் 11/2 தேக்கரண்டி சோயா சாஸ், 1/2 தேக்கரண்டி வினிகர், 1/2 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி சில்லி சாஸ் மற்றும் 1/4 தேக்கரண்டி நல்ல மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சாஸ் ரெடி!!!!!!!

பின்பு பானில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் புாகும் வரை வதக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயத் தாள், செலரி மற்றும் குடை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு சிக்கன் சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்கு கிளறி வேக வைக்கவும்

சில்லி சிக்கன் ரெடி!!!!

Loading...
Categories: chicken receipies in tamil

Leave a Reply


Sponsors