சைனீஸ் சிக்கன் சூப், chines chicken soup recipes in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

 தேவையானபொருள்கள்

சிக்கன்                          –      1/4 கி

வெங்காயத் தாள்                 –      1/2 கப் ( வெங்காயம் தனியாக , கீரை தனியாக பொடியாக அரிந்து கொள்ளவும்)

குடை மிளகாய்                   –      1 நீளமாக அரிந்தது

முட்டை                                 –        1

சோள மாவு                     –      1/2 கப்

அஜின மோட்டோ               –      1 சிட்டிகை

உப்பு                           –      ருசிக்கேற்ப்ப

பூண்டு                         –      6 பல்

வெண்ணெய்                   –      1 மே. க

தண்ணீர்                       –      1 லி

செய்முறை

 * முதலில் சிக்கனை கழுவி 2 கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவைக்கவும்.

    * ஆறியதும் எலும்பை நீக்கி விட்டு இறைச்சியை மட்டும் எடுத்து கொள்ளவும்

    * ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து,பட்டரை போடவும்

    * பட்டர் உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தயும், பூண்டையும் போட்டு வதக்கவும்.

    * அடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிய சிக்கனை போட்டு வேக விடவும்.

    * பிறகு அரிந்தா குடைமிளகாயை சேர்க்கவும்.

    * சிக்கன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி,மேலும் 1 லி தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும் இப்பொழுது அஜினமோட்டோவை சேர்க்கவும்

    * சோள மாவை 1 கப் நீரில் கரைத்து சூப்பில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு உப்பு சேர்க்கவும்.

    * முட்டையை நன்றாக அடித்து, அதை கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் ஊற்றும் போதே,ஒரு முள் கரண்டி கொண்டு சூப்பில் விழும் முட்டயை கலக்கி கொண்டேயிருக்கவும்… அப்பொழுதுதான் சூப்பின் மேல் முட்டை நூல் நூலாக திரிந்து மிதக்கும்.

    * இதுவே சைனீஸ் சிக்கன் சூப். சூடாக அருந்த சுவையாக இருக்கும்.

Loading...
Categories: Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors