கிரெம்ஸ் லெக் பீஸ், crumb leg piece recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையானபொருள்கள்

சிக்கன் லெக் பீஸ்                    –      10

மிளகாய் தூள்                    –      ஒரு மேசை கரண்டி

சிக்கன் மசாலா                  –      ஒரு மேசை கரண்டி

உப்பு                               –      இரண்டு தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது           –      ஒரு மேசை கரண்டி

சோள மாவு                      –      இரண்டு மேசை கரண்டி

பிரெட் கிரெமெஸ்               –     கால் கப்

முட்டை                           –      இரண்டு

கரம் மசாலா                     –      அரைதேக்கரண்டி

எண்ணெய்                       –      பொரிக்க தேவையான அளவு

மல்லித் தளை                   –      சிரிது

கறிவேப்பிலை                   –      சிறிது

கடலை மாவு                    –      இரண்டு தேக்கரண்டி

வினிகர்                          –      ஒரு தேக்கரண்டி

செய்முறை

* தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.சிக்கனை நன்கு (ஒரு சொட்டு, வினிகர், இரண்டு தேக்கரண்டி கடலை மாவு )சேர்த்து பிசறி கழுவி எடுக்கவும்.

*கழுவிய சிக்கனை நல்ல ஆழமாகா நாலா பக்கமும் கீரல் போட வேண்டும்.

*.சிக்கனை குக்கரில் போட்டு அதில் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,பாதி மிளகாய் தூள்,பாதி சிக்கன் மசாலா,கரம் மசாலா, கருவேப்பிலை ,கொத்துமல்லி மண்போக கழுவி பொடியாக அரிந்து அதையும் சேர்த்து நன்கு பிசறி இரண்டு விசில் விட்டு இரக்க வேண்டும்.

*.தனியாக ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டை, மீதி உள்ள மிளகாய்தூள்,சிக்கன் மசாலா,கார்ன்பிளார் மாவு கிரெம்ஸ் பவுடர் அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும்.

*.வெந்து வைத்துள்ள சிக்கனில் தண்ணீர் அதிகம் இருந்தால் அதை வடித்து விட்டு மசாலாவோடு சேர்த்து நல்ல பிசறை வைக்கவேண்டும். மசாலா சச்ரியாக ஒட்ட வில்லை என்றால் வடித்த தண்ணீர் சிறிது ஊற்றி பிசையலாம்.இப்போது இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும்.

*ஒரு வாயன்ற வனலியில் பொரிக்க தேவையண எண்ணை ஊற்றி + படரும் சேர்த்து கொள்ளலாம். கொள்ளும் அள்விற்கு போட்டு மிதமான தீயில் நல்ல மொருகலாக பொரித்து எடுக்கவேண்டும்.

* பொரித்ததை நன்கு எண்ணை வடியுமாறு ஒரு டிஸு பேப்பர் (அ) நியுஸ் பேப்பரில் வைத்து வடிய விட வேண்டும்.

*இப்போது சுவையான கிரெம்ஸ் லெக் பீஸ் ரெடி.!!!!!!!!!!!!!

Loading...
Categories: chicken receipies in tamil

Leave a Reply


Sponsors