கறிவேப்பிலை அவல் தோசை, curry leaves aval dosai recipe in tamil, thosai recipe samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி            –      ஒன்றரை கப்

புழுங்கலரிசி            –      அரை கப்

அவல்                   –      அரை கப்

உளுந்து                 –      அரை கப்

துவரம் பருப்பு          –      ஒரு மேசைக்கரண்டி

வெந்தயம்             –      ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை ,        –      ஒன்றரை கப்

பச்சை மிளகாய்           –      4

சின்ன வெங்காயம்     –      10

சீரகம்                   –      ஒரு தேக்கரண்டி

உப்பு                     –      தேவையான அளவு

எண்ணெய்             –      தேவையான அளவு

செய்முறை

பச்சை அரிசி, புழுங்கலரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணிநேரம் ஊறவைக்கவும். அரைப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன் அவலை ஊறவைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஐந்து மணிநேரத்திற்கு பின் அரிசி, பருப்பு கலவையை நைசாக அரைக்கவும். அவலுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நைசாக அரைத்து அரிசி மாவுக்கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு மாவை ஐந்து முதல் ஆறு மணிநேரம் வரை புளிக்கவிடவும்.

மாவு புளித்த பின்பு தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.

சத்தான, சுவையான கறிவேப்பிலை தோசை தயார். பூண்டு சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன். சாப்பாட்டில் கறிவேப்பிலையை ஒதுக்குபவர்களை கறிவேப்பிலை சாப்பிட வைப்பதற்கேற்ற நல்ல வழி.

Loading...
Categories: Dosai recipes in tamil

Leave a Reply


Sponsors