முருங்கை கீரை & கூனி மீன் தோரன், drumstick leaves kooni fish thoran recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்                   –              2 மேஜைக்கரண்டி

கடுகு                                                    –            1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு                            –              1 தேக்கரண்டி

வெங்காயம்                                     –              1 நடுத்தர அளவு(நறுக்கியது)

கறிவேப்பிலை                             –            கைப்பிடியளவு

முருங்கை கீரை                           –              2 கப்

கூனி மீன்                                        –              300 கிராம்

உப்பு                                                    –            தேவையான அளவு

மசாலாவுக்கு

தேங்காய் எண்ணெய்               –            1 கப்

வத்தல் மிளகாய்                          –              4

சீரகம்                                                  –              1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும் ஏனெனில் அவற்றில் மணல் கலந்திருக்கும்

தேங்காயை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

பின்பு அதனுடன் வத்தல் மிளகாய் சேர்க்கவும்

ஜீரகம் மற்றும் பூண்டு சேர்க்கவும்

நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்

பின்பு ஒரு மண் சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பின்பு அதனுடன் கடுகு மற்றும் உழுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்

பின்பு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்

வெங்காயம் சுருங்கும் வரை வதக்கவும்

பின்பு நன்கு சுத்தம் செய்த முருங்கை கீரை சேர்க்கவும்

முருங்கை கீரை வதங்கும் வரை நன்கு கிளறவும்

பின்பு அதனுடன் கூனி மீனை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு அதிக சூட்டில் 5 நிமிடம் வேக வைக்கவும்

பின்பு அரைத்த மசாலாவை சேர்க்கவும்

அதனை 2-3 நிமிடம் அதிக சூட்டில் வேக வைக்கவும்

 கூனி மீன் தோரன் ரெடி

Loading...
Categories: raal recipes in tamil

Leave a Reply


Sponsors