முட்டை பஜ்ஜி, egg bajji recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

வேக வைத்த முட்டை       –        5

கடலை மாவு               –        1/2 கப்

அரிசி மாவு                 –        2 மேஜைக்கரண்டி

ஓமம்                       –        1/8 தேக்கரண்டி

மிளகாய் தூள்              –        1/4 தேக்கரண்டி

உப்பு                        –        தேவையான அளவு

மஞ்சள் தூள்                –        சிறிது

நீர்                          –        தேவையான அளவு

எண்ணெய்                  –        பொரிக்க

அரைக்க

வெங்காயம்                 –        1

பச்சை மிளகாய்             –        1

இஞ்சி பூண்டு விழுது        –        1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ஓமம், உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்

மிக்சியில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

2 மேஜைக்கரண்டி நீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை கடலை மாவு கலவையுடன் சேர்க்கவும். தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

கலவை தயாராகி விட்டது

வேக வைத்த முட்டைகளின் ஓட்டை நீக்கி விடவும். முட்டைகளை 3-4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அனைத்து துண்டுகளையும் மாவுக் கலவையில் முக்கி எடுக்கவும்.

பின்பு சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சிறிது நேரத்திற்கு பின் அதனை திருப்பிப் போட்டு இருபக்கங்களும் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

பின்பு இரண்டையும் வடிகட்டி கிச்சன் பேப்பரில் வைக்கவும்

பின்பு நறுக்கிய வெங்காயம், மல்லித் தளை மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு கலக்கவும்.

பின்பு அதனை பஜ்ஜியின் மீது வைக்கவும். முட்டை பஜ்ஜி ரெடி!!!

Loading...
Categories: egg recipes in tamil

Leave a Reply


Sponsors