முட்டை மசாலா குழம்பு, egg masla kulambu curry recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

முட்டை                      –       4

வெங்காயம்                  –       1

தக்காளி                      –       3/4 கப்

கறி வேப்பிலை               –       1 கொத்து

இஞ்சி பூண்டு விழுது          –       1 தேக்கரண்டி

உப்பு                         –       தேவையான அளவு

எண்ணெய்                   –       3 மேஜைக்கரண்டி

மல்லி தளை                 –       சிறிது

செட்டிநாடு மசாலாவுக்கு

கச கசா                      –       1.5 மேஜைக்கரண்டி

தேங்காய்                     –       1/4 கப்

கொத்த மல்லி               –       2 தேக்கரண்டி

சோம்பு                       –       3/4 தேக்கரண்டி

ஜீரகம்                       –       1/2 தேக்கரண்டி

நல்ல மிளகு                 –       1/4 தேக்கரண்டி

வத்தல்மிளகாய்            –       5

ஏலக்காய்                   –       2

பட்டை                      –       1 இன்ச் துண்டு

செய்முறை

முட்டையை நன்கு கழுவி வேக வைத்த அதன் ஓட்டினை நீக்கி விடவும்.

செட்டிநாடு மசாலா

பானில் வத்தல் மிளகாய், கொத்த மல்லி, ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

மல்லியின் பச்சை வாசம் நீங்கியதும் ஏலக்காய், சோம்பு, வால் மிளகு, கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

பின்பு கசகசா அல்லது முந்திரி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின்பு துருவிய அல்லது நறுக்கிய தேங்காய் சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை வறுக்கவும்.

அதன் பின் இறக்கி ஆற வைக்கவும் ஆறியதும் அவற்றை மிக்சி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.

சிறிது நீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

விரும்பினால் கடாயில் நெய் விட்டு சூடானதும் அதில் முட்டைகளைப் போட்டு மிதமான தீயில் வைக்கவும் முட்டையின் மேல் பகுதி பொன்னிறமானதும் அதன் மீது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி தனியே வைக்கவும்.

பின்பு அதே பானில் சிறிது எண்ணெய் கூட சேர்த்து சூடானதும் கடுகு தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும்.

நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

தக்காளி விழுது சேர்க்கவும்

தக்காளியின் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.

பின்பு அரைத்த மசாலா விழுது மற்றும் சிறிது நீர் சேர்க்கவும்.

குழம்பு சிறிது கெட்டியானதும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு முட்டை சேர்க்கவும். நன்கு கலக்கி மல்லித் தளை சேர்க்கவும். சிறிது நேரம் சிம்மில் வைத்து விட்டு தீயை அணைத்து விடவும்.

செட்நொடு முட்டை மசாலா குழம்பு ரெடி!!!!!

Loading...
Categories: egg recipes in tamil

Leave a Reply


Sponsors