மீன் பீட்ஸா, fish pizza recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

வெள்ளை ரொட்டி மாவு      –        500 கிராம்

ஈஸ்ட் தூள்                  –        5 கிராம்

உப்பு                        –        தேவையான அளவு

சூடான நீர்                   –        1-1/3 கப்

ஆலிவ் ஆயில்              –        1 தேக்கரண்டி(தேவைக்கு)

பூண்டு                      –        1 பல்

தக்காளி                    –        1

வத்தல்மிளகு செதில்கள்   –        சிறிது

சாலமன் மீன்               –        வேக வைத்த துண்டுகள்

கானாங்கெழுத்தி மீன்       –       வேக வைத்த துண்டுகள்

இறால்                      –       வேக வைத்தது

செய்முறை

மைக்ரோ வேவ் அவனை 425°F வெப்பத்தில் வைக்கவும்.அதில் பேக்கிங் ஷீட்டை வைக்கவும்.

மாவு , ஈஸ்ட் , உப்பு மற்றும் நீர் சேர்த்து நன்கு பிசையவும். சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். மாவு மென்மையாகும் வரை பிசைந்து ஒரு பந்து போல் உருட்டிக் கொள்ளவும்.

பின்பு அதனை ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடி சூடான இடத்தில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து செவ்வக வடிவில் உருட்டிக் கொள்ளவும்.

பின்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு, தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

பின்பு இந்த தக்காளி கலவையை மாவின் மீது வைக்கவும். அதன் மீது மீன் துண்டுகள் மற்றும் இறால்களை வைக்கவும். மீன்களின் மீது சிறிது ஆலிவ் ஆயில் தெளித்துக் கொள்ளவும். பின்பு அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து 10-12 நிமிடம் அல்லது பீட்ஸா வேகும் வரை வேக வைக்கவும். மீன் பீட்ஸா ரெடி.

Loading...
Categories: pizza recipe in tamil

Leave a Reply


Sponsors