குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஃப்ரூட் ரைஸ் ரெசிபி!, fruit rice recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை குதுகலமாக்க சுவையான ஃப்ரூட் ரைஸ் செய்து கொடுங்கள். இதில் ஏராளமான சத்துக்களோடு, பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் இதை ரசித்து உண்பார்கள். இப்போது ஃப்ரூட் ரைஸ் எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், நெய் – 4 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா – 2, பிரியாணி மசாலா ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய பைனாப்பிள், நறுக்கிய ஆப்பிள், திராட்சைப்பழம் (சேர்த்து) ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழ- சிறிதளவு, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசியை கால் மணி நேரம் ஊறவிட்டு வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து, அதில் நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து… புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பழங்களை சேர்த்து, சாதத்தையும் போட்டுக் கிளறி, அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து சிறிது நேரத்துக்குப் பிறகிகு இறக்கினால் சுவையான ஃப்ரூட் ரைஸ் ரெடி!!

Loading...
Categories: Rice Recipes In Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors