கிரீன்ஸ் ஸ்பைசி பிரியாணி, greens spicy briyani recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்:

கீரை-1 கப் (நறுக்கிய ஏதேனும் இரு வகை)

பிரியாணி அரிசி-1 1/2 கப்

மஞ்சள் தூள், கரம் மசாலா-சிறிதளவு

புதினா, மல்லி விழுது-தலா 1 டீஸ்பூன்.

பொடிக்க 

பட்டை-1 துண்டு

லவங்கம்-2

ஏலக்காய்-2

மராட்டி மொக்கு-1

அன்னாசிப் பூ-1

பச்சை மிளகாய்-8 (தேவைப்படும் காரத்துக்கு ஏற்ப)

பூண்டு-3 பல்

இஞ்சி-1 துண்டு

நாட்டுத்தக்காளி-3

வெங்காயம்-1, (நீளமாக நறுக்கியது)

எண்ணெய் & நெய்-100 கிராம்

உப்பு-சிறிதளவு

 செய்முறை:

அரிசியைக் கழுவி, ஒன்றுக்கு இரண்டு வீதம் தண்ரில் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் கலவை சேர்த்து பொடித்த மசாலா சேர்க்கவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி புதினா, மல்லி விழுது சேர்க்கவும். வதங்கியபின் நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி நீருடன் கூடிய ஊறிய அரிசியை சேர்த்து மூடி குக்கர் வெயிட் வைத்து 2 விசிலில் வைத்து இறக்கவும். கிரீன்ஸ் ஸ்பைசி பிரியாணி தயார்.

Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors