இட்லி, idli recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

அரிசி                     –        1 கப்

புழுங்கல் அரிசி           –        1 கப்

உளுத்தம் பருப்பு          –       ½ கப்

அவல்                   –        ¼ கப்

வெந்தயம்               –        ¼ தேக்கரண்டி

நீர்                       –        தேவையான அளவு

உப்பு                    –        தேவையான அளவு

எண்ணெய்               –        தேவையான அளவு

செய்முறை

உழுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் சேர்த்து 4-5 மணிநேரம் ஊற வைக்கவும். அதே போல் அரிசி மற்றம் அவலை வேறொரு பாத்திரத்தில் போட்டு நீா சேர்த்து 4-5 மணிநேரம் ஊற வைக்கவும்

பின்பு உழுத்தம் பருப்பை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

அதனை கிரைண்டரில் போடவும்

அதனுடன் 1 அல்லது 2 மேஜைக்கரண்டி நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்

அதன் பின் அரிசியை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

அதனை கிரைண்டரில் போடவும்

அதனுடன் தேவையான அளவு நீா் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு அதனை உழுத்தம் பருப்புடன் சேர்த்து நன்கு கலக்கவும்

உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு அதனை மூடி 8-9 மணிநேரம் வைக்கவும்

மறுநாள் மாவு நன்கு நொதித்திருக்கும்

இட்லி குக்கரை எடுத்துக் கொள்ளவும். அதிலுள்ள பாத்திரத்தில் நீரை நிரப்பி கொதிக்க வைக்கவும். இட்லி தட்டுகளிலுள்ள குழிகளில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். பின்பு கரண்டியால் மாவை எடுத்து அந்த குழிகளில் விடவும்

பின்பு அதனை இட்லி குக்கரில் வைத்து அதன் விசிலை நீக்கி விட்டு 10- 12 நிமிடம் வேக வைக்கவும்

பின்பு இட்லி தட்டுகளை வெளியே எடுத்து சிறிது நேரம் வைக்கவும். பின்பு கரண்டியால் இட்லிகளை எடுத்து வேறெரு பாத்திரத்தில் வைக்கவும்

இட்லி ரெடி

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors