இட்லி ரெசிபி, idli recipe in tamil, samayal kurippukal in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

ச்சரிசி                  –        1 கப்

உளுத்தம் பருப்பு         –        1 கப்

வெந்தயம்               –        ¼ தேக்கரண்டி

வேக வைத்த அரிசி      –        ½ கப்

உப்பு                    –        தேவையான அளவு

நீர்                      –        தேவையான அளவு

செய்முறை

உழுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் வெந்தயம் சேர்க்கவும். அவற்றை நன்கு கழுவி சிறிது நேரம் நீரில் ஊற வைக்கவும்

பின்பு அரிசியை எடுத்து அதனையும் நன்கு கழுவி நீரில் ஊற வைக்கவும்

பின்பு உழுத்தம் பருப்பை மிக்சியில் போட்டு அதனுடன் நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

அரிசியையும் அதேபோல் தேவையான நீர் மற்றும் வேக வைத்த அரிசி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

இதனையும் உழுத்தம் பருப்புடன் சேர்த்து அதே பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்

அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு அதனை ஒரு மூடியால் மூடி இரவு முழுவதும் வைக்கவும்

மாவின் அளவு சிறிது உயர்ந்திருக்கும்

பின்பு இட்லி தட்டை எடுத்து அதில் சிறிது எண்ணெய் தடவவும்

ஒரு கரண்டியில் மாவை எடுத்து அதனை இட்லி தட்டில் உள்ள குழியில் விடவும்.

அனைத்து தட்டுகளிலுள்ள அதனைத்து குழிகளிலும் மாவை நிரப்பவும்

பின்பு அதனை குக்கரில் வைத்து வேக வைக்கவும்

இட்லி வெந்ததும் இட்லி தட்டுகளை வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்

பின்பு கரண்டியை எடுத்து அதனை நீரில் முக்கி எடுத்து அந்த கரண்டியால் இட்லிக்களை எடுத்து தனியே வைக்கவும்

இடலி ரெடி. இதனை சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors