இந்தியன் மீன் குழம்பு, Indian fish curry meen kulambu recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

ஊற வைக்க

மீன்                        –        500 கிராம்

இஞ்சி பூண்டு விழுது        –        1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                –       1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்               –        1/2 தேக்கரண்டி

உப்பு                        –        தேவையான அளவு

மீதமுள்ள பொருட்கள்

எண்ணெய்                  –        2 மேஜைக்கரண்டி

வெங்காயம்                 –        2

தக்காளி                    –        2

சோம்பு                     –        1/2 தேக்கரண்டி

 –        1 கப்

தேங்காய் துருவல்          –        2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்               –        1 தேக்கரண்டி

கறி வேப்பிலை             –        1 கொத்து

பச்சை மிளகாய்             –        1

சின்ன வெங்காயம்          –        1

இஞ்சி பூண்டு விழுது        –        1 தேக்கரண்டி

கரம் மசாலா                –        11/2 தேக்கரண்டி

நீர்

செய்முறை

பானில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

தக்காளி சேர்க்கவும்

பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

தேங்காய் துருவல், மிளகாய் தூள், உப்பு, சோம்பு, மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனை இறக்கி ஆற வைக்கவும்.

பின்பு மீனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அனைத்து துண்டுகளிலும் மசாலா படும்படி நன்கு கலக்கவும்

பின்பு பானில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மீனை வைத்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து தனியே வைக்கவும்.

பின்பு வதக்கிய தக்காளி வெங்காய கலவையை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

2 தேக்கரண்டி நீர் விட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு இரகம் தாளிக்கவும். பின்பு வெங்காயம் கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பின்பு அரைத்த மசாலா விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். மசாலாக்களின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

பின்பு 11/2 கப் நீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

5 நிமிடங்கள் அதனை கொதிக்க வைக்கவும். சுவையை சரிபார்த்துக் கொள்ளவும். புளி சேர்க்க விரும்பினால் இப்போது சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு மீன் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

பின்பு மல்லித் தளை சேர்க்கவும். இந்தியன் மீன் குழம்பு ரெடி!!!!!

Loading...
Categories: fish curry recipes in tamil, Non Vegetarian Recipes Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors