கார மிக்ஸர், kaara mixer recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

காராபூந்தி

தேவையான பொருட்கள்

கடலை மாவு                    –      3/4கப்

தண்ணீர்                 –      1/2 கப்

எண்ணெய்

மஞ்சள் food colour                 –               2 துளிகள்

செய்முறை

கடலைமாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

மஞ்சள் கலரையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.

மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து பூந்திகளாகப் பொரித்தெடுக்கவும்.

ஓமப்பொடி

தேவையான பொருட்கள்

கடலைமாவு             –      1கப்

அரிசிமாவு               –      1/2கப்

வெண்ணெய்            –      1டீஸ்பூன்

பெருங்காயத் தூள்      –      1/8டீஸ்பூன்

தண்ணீர்

உப்பு

எண்ணெய்

செய்முறை

கடலைமாவு-அரிசிமாவு-வெண்ணெய்-உப்பு-பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் கலந்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவுபதத்துக்கு பிசையவும்.

எண்ணெய் காயவைத்து, முறுக்கு அச்சில் சிறிய கண்கள் இருக்கும் தட்டை போட்டு, நேரடியாக ஓமப்பொடியை எண்ணெயில் பிழிந்துவிடவும்.

ஓமப்பொடி பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

மிக்ஸர்

தேவையான பொருட்கள்

பூந்தி

ஓமப்பொடி( கைகளால் நொறுக்கிக் கொள்ளவும்.)

மிளகாய் தூள்         –      1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள்     –      1/8டீஸ்பூன்

உப்பு

எண்ணெயில் பொரிக்க

நிலக்கடலை           –      1/4கப்

பொட்டுக்கடலை        –      1 கைப்பிடி

அவல்                  –      1 கைப்பிடி

கறிவேப்பிலை         –      2 கொத்து

முந்திரி                –      10

நசுக்கிய பூண்டு         –      4பற்கள் (விரும்பினால்)

செய்முறை

எண்ணெய் காயவைத்து பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாகப் பொரித்தெடுக்கவும்.

எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பூண்டு வாசனையுடன் மொறுமொறுப்பான காரசாரமான மிக்ஸர் ரெடி!

குறிப்பு

காராபூந்தி-ஓமப்பொடி இவற்றை முன்பே பொரித்து வைத்துக்கொண்டால் மற்றபொருட்களை பொரித்து கலந்தால் சிலநிமிடங்களில் சூப்பர் மிக்ஸர் ரெடி!

Loading...
Categories: Snacks receipies in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors