காப்பரிசி, kapparisi recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

புட்டரிசி                –      1 கப்

வெல்லம்                –      1 கப்

 பொட்டுக்கடலை         –      1 டேபிள் ஸ்பூன்

எள்                      –      2 டீ ஸ்பூன்

ஏலக்காய் தூள்            –      அரை டீஸ்பூன்

தேங்காய்                –      1 டேபிள் ஸ்பூன் (பல் பல்லாகக் கீறியது)

நெய்                     –      2 டீஸ்பூன்.

 

செய்முறை

புட்டரிசியை நன்றாகக் கழுவி நிழலில் உலர்த்தவும். வெறும் கடாயில் சிறிது சிறிதாகப் போட்டு மொறு மொறுப்பாக வறுத்தெடுக்கவும். அதேபோல் எள்ளையும் வறுக்கவும். பிறகு நெய்யில் தேங்காயையும் வறுக்கவும்.

இத்துடன் ஏலக்காய்தூள், பொட்டுக்கடலையைக் கலந்து எடுத்து வைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.

கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைக்கவும். பாகானதும் அரிசிக் கலவையைக் கொட்டி இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors