வெண்டைக்காய் மோர்க்குழம்பு, ladies finger curry okra butter milk curry recipe in tamil, cooking tips in tamil, samayal kurippukal in tamil

தேவையானவை:

வெண்டைக்காய்                     –      20

அதிக புளிப்பு இல்லாத மோர்         –      500 மில்லி

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு          –      தலா 2 டீஸ்பூன்

சீரகம்                                –      ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்                       –      2

பச்சைமிளகாய்                       –      ஒன்று

தேங்காய்                             –      ஒரு கப்

அரிசி                                 –      ஒரு டீஸ்பூன்

கடுகு , வெந்தயம்                    –      தலா அரை டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்உப்பு           –      தேவையான அளவு..

செய்முறை:

வெண்டைக்காய்களை காம்பு நீக்கி இரு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, மோருடன் கலந்து, உப்பு போட்டுக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம் தாளித்து…  மோர் கலவையை சேர்த்து, வதக்கிய வெண்டைக்காய்    துண்டுகளையும் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Kuzhambu Recipes Tamil, Saiva samyal

Leave a Reply


Sponsors