வெண்டைக்காய் வறுவல், ladies finger fry recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையானப் பொருட்கள்

வெண்டைக்காய்                              –              15

சின்னவெங்காயம் (அரிந்தது)       –              10

தக்காளி                                            –              1

சாம்பார் தூள்                                    –              2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                                   –            அரைதேக்கரண்டி

வெந்தயம்யத் தூள்                         –              சிறிது

பொட்டுக்கடலைப பொடி                 –              1மேஜைக்கரண்டி

உப்பு,எண்ணெய்                               –              தேவைக்கு

தாளிக்க

கடுகு                                                –              1தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு                           –              2 தேக்கரண்டி

கறிவேப்பிலை                               –              1கொத்து

பெருங்காயம்                                 –              சிறிது

வத்தல்மிளகாய்                          –              2

செய்முறை

வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு வெட்டி வைக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை,வரமிளகாய்  சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின் தக்காளிஇ சாம்பார்தூள் சேர்த்து குழையும் வரை வதக்கவும்

பின்பு வெண்டைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும்.பின்பு உப்பு சேர்க்கவும்

கடைசியாக பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி

குறிப்பு: பொட்டுக்கடலை சேர்ப்பதால் வெண்டைக்காயின் வழுவழுப்பு தெரியாது.

Loading...
Categories: Salad recipes in Tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors