வெண்டைக்காய் பச்சடி, ladies finger pachchadi recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்        –       கால் கிலோ

தேங்காய்துருவல்      –       கால் கப்

தயிர்                   –       1 கப்

வத்தல்மிளகாய்        –       2

உப்பு                   –       தேவைக்கேற்ப

தேங்காய் எண்ணெய்  –       பொரிக்க

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்  –       1 டீஸ்பூன்

கடுகு                  –       1 டீஸ்பூன்

பெருங்காயம்          –       கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை         –       10

செய்முறை:

 *தேங்காயுடன் மிளகாய், உப்புச் சேர்த்து அரைத்து, தயிரில் கலக்கவும்.

*சிறிய கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

*பிறகு கறிவேப்பிலை சேர்த்து, அதை தயிர் கலவையில் கொட்டவும். பெரிய கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வெண்டைக்காய் துண்டுகளைப் பொரித்தெடுத்து, எண்ணெய் வடியும்படி ஒரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.

*பரிமாறுவதற்கு முன், பொரித்த வெண்டைக்காய்களை, தயிர் கலவையில் சேர்க்கவும்.

*எல்லாவிதமான சாதங்களுக்கும் பொருத்தமான சைட் டிஷ் இது.

Loading...
Categories: Salad recipes in Tamil, Sambar Recipe in tamil, சைவம்

Leave a Reply


Sponsors