எலுமிச்சை சிக்கன், lemon chicken recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

சிக்கனை பதப்படுத்த

எலும்பில்லாத சிக்கன்  –        300 கிராம்

எண்ணெய்             –        1/2 மேஜைக்கரண்டி

இஞ்சி விழுது          –        1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு       –        2 மேஜைக்கரண்டி

உப்பு                  –        தேவையான அளவு

மிளகாய் தூள்         –        3/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்          –        1/8 தேக்கரண்டி

மீதமுள்ள பொருட்கள்

எண்ணெய்            –        1/2 தேக்கரண்டி

இஞ்சி                –        1 மேஜைக்கரண்டி

பூண்டு                –        1/2 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்       –        1

வெங்காயம்           –        1

சர்க்கரை              –        1/2 தேக்கரண்டி

கரம் மசாலா          –        1 தேக்கரண்டி

சோயா சாஸ்         –        1/2 மேஜைக்கரண்டி

புதினா                –        கைப்பிடியளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.

நன்கு கலக்கி 11/2 மணி நேரங்கள் தனியே வைக்கவும்.

பின்பு பானில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்.

இஞ்சி மற்றும் பூண்டின் பச்சை வாசம் போனதும் வெங்காயம், பச்சை மிளகாய், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்.

வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.

பின்பு சிக்கன் சேர்க்கவும். சிக்கன் பாதியளவு வேகும் வரை நன்கு கிளறி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

கரம் மசாலா தூள் சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை 2-3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும். சுவையை சர்பார்த்து தேவையானவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு நறுக்கிய புதினா சேர்க்கவும்.

சிக்கன் முழுவதுமாக வெந்ததும் தீயை அணைத்து விடவும்.

எலுமிச்சை சிக்கன் ரெடி!!!!

Loading...
Categories: chicken receipies in tamil

Leave a Reply


Sponsors