லாலிபாப் இட்லி, lolli pop idli recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையானபொருள்கள்

இட்லி அரிசி                                       –          200 கிராம்,

உளுத்தம் பருப்பு                                –          100 கிராம்,

கடலைப் பருப்பு                                 –          100 கிராம்,

முளைகட்டிய பாசிப்பயறு                  –          100 கிராம்,

துவரம் பருப்பு                                    –          100 கிராம்,

சீரகம்வெந்தயம்                              –          தலா 1 டீஸ்பூன்,

வத்தல் மிளகாய்                               –          4,

உப்புநெய்                                         –          தேவைக்கேற்ப,

பல் குத்தும் குச்சிகள்                        –          தேவைக்கேற்ப (பெரிய கடைகளில் கிடைக்கும்).

தாளிக்க

கடுகுஉளுந்துகடலைப் பருப்பு,முந்திரி,

எண்ணெய்                                          –          தேவையான அளவு.

செய்முறை

*அரிசி, பருப்பு வகைகளை வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

* பிறகு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு சற்று  கரகரப்பாக அரைத்து, உப்பு சேர்த்து 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

* சிறிது எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து, மாவில் கலந்து,  நெய் தடவிய குட்டிக்குட்டி கப்புகளில் மாவை ஊற்றி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

*பல் குத்தும் குச்சியில் ஒவ்வொரு இட்லியாகச் செருகி,  சிவப்பு மற்றும் பச்சை சட்னியுடன் பரிமாறவும்.

* இப்போது சுவையான லாலிபாப் இட்லிரெடி.!!!!!!!!!!!!!

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors