கடல்சி்ப்பி ஃப்ரை, mussels fry kadal sippi fry recipe in tamil, tamil samayal kurippukal in tamil, tamil; cooking tips in tamil

தேவையான பொருட்கள்

சிப்பி                   –        1 கிலோ

வெங்காயம்            –        3 (நடுத்தர அளவு)

தக்காளி                –        2 (நடுத்தர அளவு)

பச்சை மிளகாய்        –        3 – 4

இஞ்சி                  –        2 தேக்கரண்டி

பூண்டு                 –        11/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்          –        1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்         –        2 தேக்கரண்டி

மல்லி தூள்           –        11/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்     –        1/4 தேக்கரண்டி

சோம்பு                –        1/4 தேக்கரண்டி

கறி வேப்பிலை       –        1 கொத்து

தேங்காய் எண்ணெய் –        3 மேஜைக்கரண்டி

உப்பு                  –        தேவையான அளவு

செய்முறை

சிப்பிகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு அதனுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அப்போது சிப்பியின் ஓடு இரண்டாக பிளக்கும்.

பின்பு நீரை வடிகட்டி விட்டு சிப்பியை ஓட்டிலிருந்து பிரித்தெடுக்கவும். பின்பு அதிலுள்ள அழுக்குகள் மற்றும் அடிப்பகுதியில் உள்ள கறுப்பு பகுதியை நீக்கி நன்கு சுத்தம் செய்யவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சிப்பிகளை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மற்றும் 10 – 15 நிமிடங்கள் அல்லது சிப்பி வேகும் வரை வேக வைக்கவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதகக்கவும்.

வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு தக்காளி , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

தீயை குறைத்து விட்டு அனைத்து மசாலா தூள்களையும் சோ்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

பின்பு வேக வைத்த சிப்பி சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்.

கடல்சி்ப்பி ஃப்ரை ரெடி!!!

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors