ஆட்டு எலும்புகறி சூப், mutton curry soup recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையானபொருள்கள்

ஆட்டு எலும்புக் கறி                  –      1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)

தக்காளி                                  –       1/4 கிலோ

வெங்காயம்                            –       1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)

பச்சை மிளகாய்                       –       2

அரைக்க

இஞ்சி                            –      10 கிராம்

பூண்டு                                   –       10 கிராம்

மிளகு தூள்                           –       2 டீஸ்பூன்

சீரகத் தூள்                            –       2 டீஸ்பூன்

மல்லித் தூள்                         –       2 டீஸ்பூன்

மல்லித் தளை                        –       1/2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்)

நெய்                                    –       50 கிராம்

ரொட்டித்தூள்                          –       சிறிதளவு

எலுமிச்சை                           –       1/2 (சாறு எடுக்கவும்)

சர்க்கரை                              –       1/2 டீஸ்பூன்

உப்பு                                   –       தேவைக்கேற்ப

செய்முறை

*தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

*அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும்.

* தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும்.

* பின் அரைத்த தக்காளி விழுடிமச் சேர்த்து சூப்பை இறக்கவும்.

* பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். (கார்ன் மாவும் உபயோகிக்கலாம்)

*பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்..

*இப்போது சுவையான ஆட்டு எலும்புகறிசூப் ரெடி.!!!!!!!!!!!!!!

Loading...
Categories: Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors