மட்டன் ஊறுகாய், mutton urukai recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள் :

மட்டன்                    –      ஒரு கிலோ

நல்லெண்ணெய்           –      50 கிராம்

கடுகு                     –      1 ஸ்பூன்

சீரகம்                    –      சிறிதளவு

பச்சை மிளகாய்          –      நான்கு

பெரிய வெங்காயம்       –      இரண்டு

இஞ்சிபூண்டு பேஸ்ட்      –      சிறிதளவு

புளிக்கரைசல்            –      ஒரு கப்

வெந்தயம்               –      ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை           –      தேவையான அளவு

உப்பு                    –      தேவையான அளவு

செய்முறை :

* எண்ணையை ஊற்றி கடுகு, சீரகம், வறுத்து அரைத்த வெந்தயம் மற்றும் கருவேப்பிலையைத் தாளிக்கவும்.

* சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சைமிளகாய், நீளமாக நறுக்கிய பெரியவெங்காயம் ஆகியவற்றைப் போட்டு சுருள வதக்கவும்.

* பின்னர் மட்டனையும் இஞ்சிபூண்டையும் போட்டு வதக்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு திக்கான புளிக்கரைசலும் தண்ணீரும் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்கவும்.

* தண்ணீர் வற்றியதும் மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு :

* இதற்கு அடுப்பில் sim ல் இருக்க வேண்டும். குக்கரில் கூட செய்யலாம்.

* மட்டனைக் கொரகொரப்பாக அரைத்தும் செய்யலாம். அரைக்காமல் முழுதாகவும் செய்யலாம்.

Loading...
Categories: oorugai Recipes In Tamil

Leave a Reply


Sponsors