நைட்லயும் மேக்கப் இல்லாம முகம் ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இந்த இலையே போதும்.., night time makeup tips in tamil, beauty tips in tamil, alaku kurippukal in tamil

சிலருக்கு எவ்வளவு மேக்கப் போட்டாலும் முகம் மட்டும் சிறிது நேரத்தில் களை இழந்து போய்விடும். முகத்துக்கு செய்ய வேண்டிய அத்தனை பராமரிப்பையும் செய்தாலும் முகத்தில் அந்த ஃப்ரெஷ்னஸ் மட்டும் மிஸ்ஸாகும். இந்த பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதில் சிறப்பாக செயல்படுகிறது புதினா.. எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாமா?

​முகத்துக்கு புத்துணர்ச்சி

முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், தேமல்கள், தழும்புகள் என்று எந்த பிரச்சனை இருந் தாலும் அதற்குரிய பராமரிப்பு செய்ய தயங்குவதில்லை. அதே நேரம் முகத்தில் அதிகப்படியான பராமரிப்பு மேற்கொள்ளும் போது சில நேரத்தில் முகம் பளிச் தன்மையை இழந்துவிடுகிறது. வெளியில் செல்லும் போது ஃப்ரெஷ்ஷான முகத்தை எதிர்நோக்கும் பெண்கள் அநேக நேரங்களில் ஏமாற்றத்தையே சந்திக்கிறார்கள்.

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் பலவும் முகத்துக்கு கூடுதலாக அழகை தருகிறது என்பதை உணர்ந்து அதையும் பயன்படுத்துகிறோம். ஆனால் எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும் தெரிந்து உரிய முறையில் பயன்படுத்தினால் முகம் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். அந்த வகையில் புதினாவை கொண்டு முகத்தை எப்போதும் ஃப்ரெஷ்ஷாக வைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

​புதினா

புதினா அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை. உடலில் பல்வேறு நோய்கள் குறி ப் பாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளை உண்டாக்காது என்பது குறிப்பிடதக்கது. கிரேக்கர் களும், சீனர்களும் புதினாவை மருத்துவத்துக்கு மருந்தாகவே பயன்படுத்தினார்கள்.

புதினா நறுமணமிக்கது. செரிமானத்தை தூண்டக்கூடியது. பற்களை பராமரித்து வாய் துர்நாற்றப் பிரச்சனைகளை நீக்குகிறது. இவை மருத்துவகுணத்துக்கு இணையான அழகையும் தரவல்லது என்கிறார்கள் வீட்டு பெரியவர்கள்.

நமது முன்னோர்கள் சருமப் பிரச்சனைகளுக்கு புதினாவை அரைத்து பயன்படுத்திவந்தார்கள். இதை எப்படி பயன்படுத்தலாம் தெரிந்துகொள்வோம்.

​புதினா சாறில் நீராவி

முகத்தில் சருமத்துவாரத்தில் இருக்கும் அழுக்குகள் தான் முகத்துக்கு பொலிவிழந்த தோற்றத்தை தருகின்றன. என்னதான் மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்தாலும் கூட முகத்தில் இயற்கையான பளிச் தோற்றத்தை பெற முடியவில்லை என்று சொல்லும் பெண்கள் அதிகம் உண்டு.

நீரை கொதிக்க வைத்து புதினா இலைகள் இரண்டு கைப்பிடி சேர்த்து அகன்ற பாத்திரத்தில் போட்டு முகத்துக்கு நீராவி பிடிக்கலாம். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்குவதோடு முகத்தில்பருக்கள் வருவதும் தடுக்கிறது. முகத்தில் இறந்த செல்கள் நீக்கப்பட்டு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சருமத்தில் கொலாஜின் செல்களை புதுப்பிக்கிறது.முக்கின் மீது இருக்கும் வெள்ளை அல்லது கறுப்பு கொழுப்பு குருக்கள் ஆவி பிடித்து மெல்லிய துணியால் துடைக்கும் போது வேரோடு வந்துவிடும்.

தொடர்ந்து இதை கடைப்பிடிக்கும் போது அவை மீண்டும் வராது. முகத்தில் ஈரப்பதம் எப்போதும் இருக்கும் என்பதால் முகம் இரவிலும் ப்ரெஷ்ஷாக இருக்கும். மாதம் இருமுறை இப்படி செய்துவந்தால் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம்.

​முகத்துக்கு பேக்

புதினா இலைகள் சுத்தப்படுத்தி மிக்ஸியில் இலேசாக நீர் விட்டு அரைத்துகொள்ளுங்கள். இதனுடன் எலுமிச்சை சாறு, கற்றாழை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

இப்போது முகத்தை கழுவி உலர வைத்து இந்த பேக்கை தடவுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் வரை முகத்தில் இருக்கட்டும். புதினாவே குளிர்ச்சியானது என்பதால் சருமம் வறட்சியாக இருப்பவர்கள் இதனுடன் 3 துண்டு வெள்ளரி சேர்த்தும் அரைக்கலாம். பிறகு முகத்தை மிதமான நீரில் கழுவுங்கள். அதன் பிறகு வைட்டமின் இ ஆயில் அல்லது கற்றாழை சாறு கொண்டு இலேசாக மாய்சுரைசர் போல் தடவி எடுத்தால் முகத்தில் இலேசான பளபளப்பு கூடியிருப்பதை உணர்வீர்கள்.முகத்தில் இருக்கும் கருமை நிறம் மாறுவதோடு முகமும் வெள்ளையாகும்.

வாரம் ஒரு முறை இதை செய்யும் போது முகத்தில் இருக்கும் பருக்கள், அதனால் உண்டாகும் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை படிப்படியாக குறைய தொடங்கும். முகத்தில் வயதான தோற்றத்தை தடுக்கும் என்பதால் எப்போதும் இளமையாக இருக்கலாம்.

​கூந்தலுக்கு பேக்

பொடுகு பிரச்சனை இருபவர்கள் புதினாவை அரைத்து கூந்தலில் தடவி குளித்து வந்தால் பொடுகு இருக்காது. பேன் விழாது. புதினாவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடித்துவைத்து ஒரு கண் ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். தலைக்கு குளிக்கும் போது அந்தபொடியுடன் கற்றாழை சாறை தடவி தலையில் தேய்த்து குளித்துவந்தால் கூந்தல் இயற்கையாகவே கண்டிஷனர் பயன் படுத்தாமல் பளபளப்பாக இருக்கும். கூந்தல் அடர்த்தியும் அதிகமாக இருக்கும். இளநரை செம் பட்டை முடி பிரச்சனை வராமல் தடுக்கும்.

புதினா விலை குறைவானது என்றாலும் அவை முகத்துக்கு கொடுக்கும் அழகுக்கு இணை எதுவும் இல்லை. புதினாவை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் முகம் எப்போதுமே இரவிலும் கூட ஃப்ரெஷ் ஷாக இருப்பதை உணரலாம்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors