ஓட்ஸ் முட்டை ஆம்லெட், oats egg omelet recipe in tamil, tamil cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

முட்டை               –        2

ஓட்ஸ்                –        1/4 கப்

பால்                  –        4 மேஜைக்கரண்டி

உப்பு                  –        தேவையான அளவு

மஞ்சள் தூள்          –        ஒரு சிட்டிகை

கற்பூரவல்லி          –        சிறிது

நல்ல மிளகுதூள்      –        1/4 தேக்கரண்டி

பட்டர்எண்ணெய்    –        தேவையான அளவு

காய்கள்

வெங்காயம்           –        2 மேஜைக்கரண்டி

காரட்                 –        2 மேஜைக்கரண்டி

குடை மிளகாய்        –        2 மேஜைக்கரண்டி

தக்காளி               –        2 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்       –        2

மல்லித் தளை         –       சிறிது

செய்முறை

தேவையான காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், நல்ல மிளகு தூள், ஏதாவது மசாலா தூள் மற்றும் கற்பூரவல்லி சேர்க்கவும்.

பின்பு அதனுடன் 3 மேஜைக்கரண்டி பால் சேர்த்து கட்டிகள் இல்லமல் நன்கு கலக்கவும்.

பின்பு 2 முட்டைகளை உடைத்து அதனுடன் சேர்க்கவும்.

நன்கு கலக்கவும்.

பின்பு பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

தீயை மிதமாக வைத்து முட்டை கலவையை அதில் விடவும்.

பின்பு அதன் மீது அனைத்து காய்களையும் போடவும். கரண்டியால் காய்களை லேசாக அழுத்திக் கொள்ளவும்.

அதன் அடிப்பக்கம் வெந்ததும் அதனை திருப்பிப் போட்டு வேக வைக்கவும்.

பின்பு அதனை திருப்பிப் போட்டு அதன் மேல் நல்ல மிளகு தூள் மற்றும் சாட் மசாலா தூள் லேசாக தூவி விடவும்.

ஓட்ஸ் முட்டை ஆம்லெட் ரெடி!!!!

Loading...
Categories: egg recipes in tamil

Leave a Reply


Sponsors