பனங்கற்கண்டு பிஸ்கட், palmsugar biscuits recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு      –        1 கப்

பனங்கற்கண்டு       –        ¼கப்

நெய்                   –        ¼ கப்

சுக்கு தூள்            –        ½ தேக்கரண்டி

பால்                   –        2-3 மேஜைக்கரண்டி

செய்முறை

பனங்கற்கண்டை எடுத்துக் கொள்ளவும் (இதற்கு பதிலாக சர்க்கரை அல்லது வெல்லம் பயன் படுத்தலாம்).

பனங்கற்கண்டை மிகசியில் போட்டு தூளாக்கவும்

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் நெய் எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

சிறிது பால் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

சுக்கு தூள் சேர்க்கவும்

கோதுமை மாவு சேர்க்கவும்

அதனை நன்கு பிசைந்து கொள்ளவும் தேவைப் பட்டால் சிறிது பால் சேர்க்கவும்

ஒரு பிளாஸ்டிக் கவரை விரித்து அதன் மீது பிசைந்த மாவை எடுத்துக் கொள்ளவும்

வேறெரு பிளாஸ்டிக் கவரால் மாவை மூடி வைக்கவும்

பின்பு அதனை படத்தில் உள்ளது போல் விரித்துக் கொள்ளவும்

அதன் மேலுள்ள கவரை நீக்கி விட்டு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

அவற்றை கரண்டியால் எடுத்து பேக்கிங் ஷீட்டில் வைக்கவும்

பின்பு அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து சூட்டெடுக்கவும்

அவைற்றை ஆற வைத்து காற்று புகாத டப்பாக்களில் வைத்து ஒரு வாரம் வரை பயன் படுத்தலாம்

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors