பாறை மீன் பிரியாணி, para meen fish briyani recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

அரிசியை வேக வைக்க

பாஸ்மதி அரிசி              –       2 கப்

நீர்                          –        தேவையான அளவு

ஏலக்காய்                    –        4

கிராம்பு                        –       4

பட்டை                       –        1 சிறிய துண்டு

ஜீரகம்                       –       1 தேக்கரண்டி

பே லீஃப்                      –        2

உப்பு                          –        3 மேஜைக்கரண்டி

மீனை பொரிக்க

மீன் துண்டுகள்               –        ½கிலோ

உப்பு                         –        தேவையான அளவு

மிளகாய் தூள்                  –        1 தேக்கரண்டி

மல்லித் தூள்                  –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                  –        1 தேக்கரண்டி

ஜீரகம்  தூள்                   –        1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு               –        தேவையான அளவு

 எண்ணெய்                   –        ¼கப்

பிரியாணிக்கு

பிரியாணி இலை              –        1

வெங்காயம்                   –        1

பச்சை மிளகாய்                –        3

 இஞ்சி பூண்டு விழுது          –        2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்                –        1 தேக்கரண்டி

மல்லித் தூள்                 –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                –        1 தேக்கரண்டி

ஜீரகம்  தூள்                 –        1 தேக்கரண்டி

கரம் மசாலா துள்            –        2 தேக்கரண்டி

தக்காளி                      –        1

தயிர்                        –        1 கப்

புதினா  இலை               –        தேவையான அளவு

மல்லித்தளை                 –        தேவையான அளவு

உப்பு                         –        தேவையான அளவு

குங்கும பூ பால்

குங்குமப் பூ                   –        ஒரு சிட்டிகை

பால்                         –        ¼கப்

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

தேவையான அளவு நிரில் அனைத்து மசாலாக்களையும் போட்டு கொதிக்க வைக்கவும்

பின்பு அதனுடன் அரிசியை போட்டு வேக வைக்கவும்

அரிசி வெந்ததும் அதனை வடிகட்டி தனியே வைக்கவும்

மீன் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்

உப்பு மற்றும் மசாலா தூள்களை சேர்க்கவும்

எலுமிச்சை சாறு சோ்க்கவும்

சிறிது நேரம் ஊற வைக்கவும்

ஒரு பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

மீன் துண்டுகளை அதில் போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்

பின் அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்

மீதமுள்ள எண்ணெயில் பிரியாணி இலையை போடவும்

வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

பச்சை மிளகாய் சேர்க்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

அனைத்து மசாசாலா தூள்களையும் சேர்க்கவும்

பின்பு தக்காளி சேர்க்கவும்

சிறிது நீர் சேர்க்கவும்

சிறிது நேரம் வேக வைக்கவும்

அதன் பின் உப்பு சேர்க்கவும்

புதினா மற்றும் மல்லித்தளை சேர்க்கவும்

தயிர் சேர்த்து நன்கு கிளறவும்

அனைத்தும் நன்கு கலக்கும் வரை வேக வைக்கவும்

பின்பு வேக வைத்த அரிசியை அதன் மீது பரப்பி வைக்கவும்

அதன் மேல் புதினா மற்றும் மல்லித்தளை தூவவும்

சிறிது குங்குமப் பூ கலந்த பால் சேர்க்கவும்

பின்பு மீன்துண்டுகளை வைக்கவும்

 அதனை மூடி வைக்கவும்

ஒரு கனமான தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கி அதன் மேல் மேல் பிரியாணி இருக்கும் பானை(pan) வைத்து சிறிது நேரம் வேக வைக்கவும்

மணமணக்கும் ஃபிஷ் பிரியாணி ரெடி!!!!!!

Loading...
Categories: fish curry recipes in tamil, அசைவம்

Leave a Reply


Sponsors